ஞாயிறு, 1 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Prasanth Karthick
Last Modified: வியாழன், 25 ஜூன் 2020 (14:38 IST)

குற்றவாளிகளை கைது செய்ய புதிய விதிமுறைகள்! – டிஜிபி திரிபாதி அறிவிப்பு!

தமிழகம் முழுவதும் கொரோனா தொற்று அதிகரித்துள்ள நிலையில் குற்றவாளிகளை கைது செய்ய புதிய விதிமுறைகளை டிஜிபி திரிபாதி வழங்கியுள்ளார்.

தமிழகம் முழுவதும் கொரோனா பாதிப்புகள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றன. இந்நிலையில் காவல் பணியில் ஈடுபட்டுள்ள காவலர்களும் கொரோனாவால் தொடர்ந்து பாதிக்கப்பட்டு வருகின்றனர். இந்நிலையில் காவலர்கள் கொரோனா பாதிப்புகளை தவிர்க்கும் வகையில் காவல் பணியில் ஈடுபட டிஜிபி திரிபாதி தெரிவித்துள்ளார்.

அதன்படி, பாதுகாப்பு பணிகள் மற்றும் கைது செய்யும் பணிகளுக்கு 50 வயதிற்கும் குறைவான போலீஸாரை ஈடுபடுத்தக்கூடாது.

குற்றவாளிகளை அழைத்து செல்ல காற்றோடமான பெரிய வாகனங்களையே உபயோகப்படுத்த வேண்டும்.

கைது செய்யும் முன்னர் குற்றவாளிகளுக்கு மாஸ்க் அணிவிக்க வேண்டும்.
இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.