’ரஜினிக்கு வரிச்சலுகை, விஜய்க்கு அச்சுறுத்தலா? மக்களவையில் ஆவேசமடைந்த திமுக எம்பி
’ரஜினிக்கு வரிச்சலுகை, விஜய்க்கு அச்சுறுத்தலா?
வருமான வரித்துறை ரஜினிக்கு சலுகை அளித்து விட்டு விஜய்யை அச்சுறுத்தி வருவதாக திமுக எம்பியும் சன் டிவி உரிமையாளர் கலாநிதி மாறன் சகோதரர் தயாநிதிமாறன் மக்களவையில் ஆவேசமாக பேசி உள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது
சமீபத்தில் ரஜினிக்கு வருமான வரித்துறை வரிச்சலுகை அளித்ததாகவும் அவருக்கு அளிக்கப்பட்ட அபராத தொகையை ரத்து செய்யும் வகையில் அவர் மீதான வழக்கை வாபஸ் பெறுவதாகவும் செய்திகள் வெளியானது
ரஜினிக்கு சாதகமாக மத்திய அரசு வருமானவரித் துறை மூலம் நடவடிக்கை எடுத்துள்ளது என்று எதிர்க்கட்சியினர் விமர்சனம் செய்து வந்த நிலையில் திடீரென விஜய் வீட்டில் வருமான வரித்துறை ரெய்டு செய்தது
ரஜினிக்கு சலுகை செய்த மத்திய அரசு விஜய்யை அச்சுறுத்தி வருகிறது என எதிர்கட்சிகள் இரண்டையும் இணைத்து குற்றஞ்சாட்டினர்
இந்த நிலையில் இதுகுறித்து திமுக எம்பியும் சன் சன் நெட்வொர்க் நிறுவனத்தின் உரிமையாளருமான கலாநிதி மாறன் சகோதரருமான தயாநிதிமாறன் இதுகுறித்து கூறியதாவது: ரஜினிக்குக் கிடைத்த வரிச்சலுகை நடிகர் விஜய்க்கு கிடையாதா?, தமிழகத்தில் தேர்தல் வருவதால் ரஜினிக்கு வரிச்சலுகை அளித்துள்ளது வருமான வரித்துறை. ஆனால் விஜய்யை அவர் படப்பிடிப்பில் இருந்த இடத்தில் இருந்து கட்டாயப்படுத்தி அழைத்து வந்துள்ளது. இது பாரபட்சமானது என்று தயாநிதி மாறன் மக்களவையில் பேசினார்.
ரஜினியை நடித்து வரும் ‘தலைவர் 168 என்ற படத்தை சன் பிக்சர்ஸ் தயாரித்து வரும் நிலையில் அந்த நிறுவன உரிமையாளரின் சகோதரரே ரஜினிக்கு எதிராக மக்களவையில் குரல் கொடுத்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது