1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: திங்கள், 10 பிப்ரவரி 2020 (16:09 IST)

விஜய்யின் அடுத்த படத்தை இயக்கும் சிவகார்த்திகேயனின் நண்பர் ? –தளபதி 65 அப்டேட் !

விஜய்

விஜய்யின் 65 ஆவது படத்தை இயக்க கனா படத்தின் இயக்குனர் அருண்ராஜா காமராஜா ஒப்பந்தமாகியுள்ளதாக சொல்லப்படுகிறது.

நடிகர் சிவகார்த்திகேயனின் நண்பரான இயக்குனர் அருண்ராஜா காமராஜ் கனா படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானார். பெண்கள் கிரிக்கெட்டை மையமாக வைத்து உருவான அந்த படம் வெற்றி பெற்றதையடுத்து அவரது அடுத்த படம் குறித்த அறிவிப்புக்காக ரசிகர்கள் காத்திருந்தனர்.

இப்போது அருண்ராஜா காமராஜ் நடிகர் விஜய்யின் அடுத்தப் படத்தை இயக்கப் போவதாக செய்திகள் வெளியாகியுள்ளன. அவர் சொன்ன கதை விஜய் மற்றும் சன் பிக்சர்ஸ் இரு தரப்புக்கும் பிடித்துள்ளதாகவும் இப்போது அவர் திரைக்கதை அமைக்கும் பணிகளை மேற்கொண்டு வருவதாகவும் சொல்லப்படுகிறது.

விஜய் இப்போது லோகேஷ் கனகராஜ் இயக்கும் மாஸ்டர் படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு மார்ச் இறுதியில் முடிகிறது. ஏப்ரலில் மாஸ்டர் படம் வெளியானதும் மே மாத இறுதியில் தளபதி 65 படத்தின் படப்பிடிப்பு தொடங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.