1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Updated : புதன், 10 ஜூன் 2020 (20:04 IST)

சென்னையில் சமூக பரவல் தொற்று ஏற்பட்டுள்ளதா? அமைச்சர் விஜயபாஸ்கர் பதில்

சென்னையில் கொரோனா தொற்று சமூக பரவலாக ஏற்பட்டுள்ளதா? என்பதை மத்திய அரசுதான் தெரிவிக்க வேண்டும் என தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் அவர்கள் தெரிவித்துள்ளார் 
 
சென்னையில் நாளுக்கு நாள் கொரோனா வைரஸ் தாக்கம் அதிகரித்துக் கொண்டே செல்கிறது என்பதும் இன்று கூட 1300க்கும் மேற்பட்டவர்கள் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டு உள்ளதாக வெளிவந்துள்ள செய்தி பெரும் அதிர்ச்சி ஏற்படுத்தியுள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.
 
இந்த நிலையில் பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் சென்னையில் கொரோனா தொற்று சமூக தொற்றாக ஏற்பட்டுள்ளதா என்ற சந்தேகத்தை கேட்டு வருகின்றனர். இது குறித்த கேள்விக்கு பதிலளித்த தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் அவர்கள் ’சென்னையில் சமூக தொற்று ஏற்பட்டு உள்ளதா என்பதை மத்திய அரசுதான் தெரிவிக்க வேண்டும் என்று கூறினார் 
 
மேலும் கொரோனா நோயாளிகள் அதிகரிப்பு குறித்து அச்சம் கொள்ளத் தேவையில்லை என்றும் நோயாளிகளை அரசு கவனத்துடன் கையாண்டு வருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்