ஜெ. அன்பழகன் மறைவுக்கு கேரள மாநில முதல்வர் இரங்கல்...
கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு உயிருக்குப் போராடி வந்த திருவல்லிக்கேணி மற்றும் சேப்பாக்கம் தொகுதி எம்.எல்.ஏ அன்பழகன் இன்று அதிகாலை மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். அவரது உயிரிழப்பிற்கு பல கட்சித் தலைவர்களும் அரசியல் பிரபலங்களும் சினிமா நட்சத்திரங்களும் அவரது குடும்பத்திற்கு இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
.இன்று நண்பகல் அவரது பூதவுடல் கண்ணம்மா பேட்டையில் நல்லடக்கம் செய்யப்பட்டது.
இந்நிலையில், கொரொனாவுடன் போராடி உயிரிழந்த ஜெ.அன்பழகன் எம்.எல்.ஏவின் மறைவு தனக்கு வருத்தம் அளிப்பதாக கேரள மாநில முதல்வர் பினராயி விஜயன் தனது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் பதிவிட்டுள்ளதாவது :
அன்பழகன் குடுமத்தினருக்கும் நண்பர்களுக்கும் கட்சியினருக்கும் கேரள மக்கள் சார்பாக ஆழ்ந்த இரங்கலை கூறிக் கொள்கிறேன் என தெரிவித்துள்ளார்.