1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: புதன், 10 ஜூன் 2020 (19:38 IST)

முக ஸ்டாலினுடன் தொலைபேசியில் பேசிய கமல்: என்ன காரணம்?

திமுக எம்எல்ஏ ஜெ அன்பழகன் அவர்கள் கடந்த 2ஆம் தேதி கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டும் இன்று காலை அவர் மரணமடைந்தார். ஜெ.அன்பழகன் அவர்களின் மறைவு திமுகவுக்கு மட்டுமின்றி சென்னை மக்களுக்கு பேரிழப்பு என்பது குறிப்பிடத்தக்கது 
 
மக்களோடு மக்களாக பழகி தனது தொகுதி மக்கள் அனைவருக்கும் உற்ற நண்பர் போலவே உதவி செய்து வந்த அன்பழகன் அவர்களின் மறைவை அவரது தொகுதி மக்கள் மட்டுமின்றி சென்னை முழுவதும் உள்ள மக்கள் கடும் சோகத்தில் ஆழ்ந்துள்ளனர் 
 
இந்த நிலையில் ஜெ அன்பழகன் அவர்களுடைய மறைவுக்கு திமுக தலைவர் முக ஸ்டாலின் அவர்களிடம் பலர் வருத்தம் தெரிவித்து வருகின்றனர். அந்த வகையிலே அன்பழகன் மறைவிற்கு திமுக தலைவர் ஸ்டாலினிடம் தொலைபேசியில் தொடர்பு கொண்ட மக்கள் நீதி மையம் கட்சி தலைவர் கமல்ஹாசன் தனது இரங்கலை அவரிடம் தெரிவித்துக் கொண்டார். இரு தலைவர்களும் சில நிமிடங்கள் இதுகுறித்து உரையாடியதாக செய்திகள் வெளியாகியுள்ளது 
 
திமுக தலைவர் முக ஸ்டாலின் அவர்களிடம் எப்போதும் மரியாதை வைத்திருக்கும் கமலஹாசன், திமுகவின் முக்கிய எம்எல்ஏ ஒருவர் காலமானதால் காரணமாக இரங்கல் தெரிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது