புதன், 25 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By sinoj kiyan
Last Modified: திங்கள், 16 மார்ச் 2020 (14:10 IST)

கொரோனா தடுப்பு முன்னெச்சரிக்கை ...தியேட்டர்கள் மூடல் !

கொரோனா தடுப்பு முன்னெச்சரிக்கை ...தியேட்டர்கள் மூடல் !

உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் பரவி வருவது மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்தியாவில் 112 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதியாகியுள்ளது.  இந்நிலையில் கொரோனா தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கன்னியாகுமரி மாவட்ட எல்லையில் திரையரங்குகள் மூடப்பட்டுள்ளன.
 
கொரோனா தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கன்னியாகுமரி மாவட்ட எல்லையில் திரையரங்குகள் மூடப்பட்டுள்ளன. 
 
விளவங்கோடு தாலூகாவை சேர்ந்த களியக்காவிளை படந்தாலுமூடு குழித்துறை  மற்றும் மார்த்தாண்டம் பகுதியில் அமைந்துள்ள 8 தியேட்டர்கள் வரும் மார்ச் 31 ஆம் தேதிவரை மூடப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. 
 
தமிழக அரசின் அறிவிப்பை அடுத்து, திரையரங்க உரிமையாளர்கள் இந்த நடவடிக்கையை எடுத்துள்ளனர்.