Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அடுத்து மதுரையில் மையம் கொள்கிறதா கொரோனா? ஒரே நாளில் இவ்வளவு பேரா?

Updated: வியாழன், 9 ஜூலை 2020 (12:42 IST)
கொரோனா வைரஸ் தாக்கம் இப்போது மதுரை மாவட்டத்தில் அதிகரித்துள்ளது வருத்தத்தை ஏற்படுத்தியுள்ளது.

தமிழகத்தில் சென்னை மற்றும் அதனை ஒட்டிய வடமாவட்டங்களில் ஆரம்பம் முதலே கொரோனா பாதிப்பு அதிகமாக இருந்து வந்தது. அதனால் அங்கு அதிக கவனம் செலுத்தப்பட்டது. இதையடுத்து தற்போது சென்னையில் கொரோனா பாதிப்பு குறைந்து வருகிறது. ஆனால் மதுரையிலோ இப்போது மீண்டும் கொரோனா வைரஸ் பாதிப்பு எண்ணிக்கை அதிகரிக்க தொடங்கியுள்ளது. அம்மாவட்டத்தில் நேற்று மட்டும் 310 பேர் புதிதாக கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இது இதுவரை இம்மாவட்டத்தில் இல்லாத அளவுக்கு அதிகமாகும்.

இதன் மூலம் மதுரையில் கொரோனா பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 53000 ஐ கடந்துள்ளது. 1600 பேர் சிகிச்சையில் குணமாகி வீடு திரும்ப, 3800க்கும் மேற்பட்டவர்கள் சிகிச்சையில் உள்ளனர். மேலும் 86 பேர் உயிரிழந்துள்ளனர். சென்னையில் இருந்து அதிகளவில் மக்கள் மதுரைக்கு சென்றதன் மூலமாகவே அங்கு கொரோனா பரவி இருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது.

எல்லாம் காட்டு

ஈரானுடன் போர்!.. அமெரிக்காவில் டீசல் விலை வரலாறு காணாத உயர்வு!..

கடைகளுக்கு தமிழில் பெயர் வைக்க நவம்பர் 1ம் தேதி வரை கெடு!.. நீதிமன்றம் அதிரடி!...

ஒரே நாளில் 40 டாஸ்மாக் சூப்பர்வைசர்ஸ் சஸ்பெண்ட்!.. தமிழக அரசு அதிரடி!...

கே.என்.நேரு இடங்களில் திடீர் சோதனை ஏன்?.. பின்னணி இதுதானா?...

கேரளாவில் கார் விபத்து! - தமிழக மாணவர்கள் 8 பேர் இறந்தது எப்படி?...

அடுத்த கட்டுரையில்
Show comments