திங்கள், 23 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Sinoj
Last Modified: வியாழன், 6 ஜனவரி 2022 (19:10 IST)

சொகுசுக் கப்பலில் பயணித்த 139 பேருக்கு கொரொனா!!

தென்னாப்பிரிக்கவில் இருந்து இந்தியா உள்ளிட்ட பல்வேறு  நாடுகளுக்கு  ஒமிக்ரான் தொற்றுப் பரவி வருகிறது. இந்நிலையில் இந்தியாவில் ஏற்கனவே கொரொனா இரண்டாவதுஅலை பரவி வரும் நிலையில் ஒமிக்ரான் தொற்று வேகமாகப் பரவி வருகிறது.

இந்தியாவில் இதுவரை கொரொனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளவர்களின் எண்ணிக்கை 1500  க்கு மேல் அதிகரித்துள்ளது.

சமீபத்தில்,  மும்பை சொகுசுக் கப்பலில் பயணித்த சுமார் 66 பேருக்கு கொரொனா தொற்று உறுதியானது. இவர்கள் அனைவரும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், மும்பையில் இருந்து கோவா திரும்பிய மற்றொர்  சொகுசு கப்பலில் 139 பேர் கொரோவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இந்தக் கப்பலில்1827 பேர் பயணம் செய்த நிலையி; 139 பேர், தனிமைபப்டுத்தபப்பட்டுள்ளதாக மும்பை  மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.