செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Sinoj
Last Modified: புதன், 16 மார்ச் 2022 (18:59 IST)

அமெரிக்க துணை அதிபர் கமலா ஹாரிஸின் கணவருக்கு கொரொனா உறுதி

அமெரிக்க துணை அதிபர் கமலா ஹாரிஸின் கணவருக்கு கொரொனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

சீனாவில் இருந்து  அமெரிக்கா, இந்தியா உள்ளிட்ட பல்வேறு நாடுகளுக்கு  கொரோனா தொற்றுப்பரவியுள்ளது.

அமெரிகாவில் கொரொனா தடுப்பூசி செலுத்தும் பணிகல் தற்போது நடந்து வருகிறது. கடந்தாண்டு தீவிரமாக இருந்த கொரொனா தொற்று, தடுப்பூசி காரணமாகக் குறைந்துள்ளது. நேற்று ஒரே நாளில் 25 ஆயிரம் பேருக்கு கொரொனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 901 பேர் உயிரிழந்துள்ளனர்.

இந்நிலையில் அமெரிக்கதுணை  ஜனாதிபதி கமலா ஹாரிஸின் கணவர் டக் எம்ஹொப்ஸுக்கு இன்று கொரொனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும்  துணை அதிபர் கமலா ஹாரிஸுக்கு கொரொனா தொற்றில்லை என வெள்ளை மாளிகை தெரிவித்துள்ளது.