வெள்ளி, 27 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By anandakumar
Last Updated : வியாழன், 7 நவம்பர் 2019 (20:58 IST)

மாவட்ட ஆட்சியரின் பேச்சால் சர்ச்சை ? தமிழக அளவில் பெரும் பரபரப்பு

கரூர் மாவட்டத்தில் காவிரி மற்றும் அமராவதி ஆற்றில் மாட்டு வண்டிகளில் மணல் எடுக்க அனுமதி கோரி கரூர் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளிக்க வந்த போது., மாவட்ட ஆட்சியரின் பேச்சால் சர்ச்சை ? செய்யாத தவறுக்கு நான் நீதிமன்றத்தில் பதில் கூறி வருகின்றேன் என்று பேசியதால் பரபரப்பு ! மாவட்ட ஆட்சியரிடம் மனு அளிக்க வந்தவர்களை, மாவட்ட ஆட்சியரின் உத்திரவின் பேரில் காவல்துறையினர் கைது செய்த சம்பவத்தினால் தமிழக அளவில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

தமிழக அளவில் அனைத்து மாவட்டங்களிலும் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம், ஆங்காங்கே மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாவட்ட ஆட்சியர் தலைமையில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடப்பதும், அங்கேயே அதற்கான தீர்வு காண்பதும் வாரந்தோறும் திங்கள் கிழமைகளில் நடைபெற்று வரும் நிலையில் கரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில், மனுக்கள் கொடுக்க முற்பட்ட நபர்களை அதே மாவட்ட ஆட்சியர் உத்திரவின் பேரில் காவல்துறையினர் கைது செய்தது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

கரூர் மாவட்டத்தில், காவிரி, அமராவதி ஆற்றின் கரையோரங்களில் வசிக்கும் மாட்டு வண்டி உரிமையாளர்கள், சுமார் 300 க்கும் மேற்பட்டோர் ஐந்து மாட்டுவண்டிகளுடன் மனு அளிக்க வந்தனர். வந்தவர்களை மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தின் முன்பே கேட்டின் முன்பு காவல்துறையினர் தடுத்து நிறுத்தினர். இந்நிலையில் காவல்துறையினருக்கும், மாட்டுவண்டி உரிமையாளருக்கும் இடையே பெரும் வாக்குவாதம் நீடித்த நிலையில் 10 க்கும் மேற்பட்டோர் மட்டுமே உள்ள நுழைய அனுமதி என்று போலீஸார் கூறியதால், அப்பகுதியில் சிறிது நேரம் சலசலப்பு ஏற்பட்டது.

அதன் பிறகு போலீஸார் அனுமதி அளித்ததின் அடிப்படையில் மனு அளித்தனர். அப்போது மாவட்ட ஆட்சியர் அன்பழகன், செய்யாத தவறுக்கு நான் நீதிமன்றத்தில் தினமும் கைகட்டி நின்று வருகின்றேன் என்று மாட்டுவண்டி உரிமையாளர்களிடம் கூறினார். மேலும், மாட்டுவண்டியில் மணல் அள்ள சாத்தியமில்லை என்று திட்டவட்டமாக தெரிவித்தார். அதன்பின்னர், பாரதீய மஸ்தூர் சங்கம் சார்பில் மாட்டுவண்டியில் மணல் அள்ள அனுமதி கேட்டு மனு அளிக்க முற்பட்ட போது, கூச்சல் குழப்பம் நீடித்ததால், மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் திடீரென்று பரபரப்பு ஏற்பட்டது. இந்நிலையில், மாவட்ட ஆட்சியரின் உத்திரவிற்கிணங்க, கரூர் மாவட்ட காவல்துறையினர் பாரதீய மஸ்தூர் சங்க நிர்வாகிகள் செளந்தரராஜன், சீனிவாசன், ஜெயராமன், மாசிலாமணி உள்ளிட்ட 4 பேரை கைது செய்து காவல்துறையினரின் வேனில் ஏற்றி சென்றனர்.

அப்போது மாவட்ட ஆட்சியரின் தவறான வழிமுறைகளை கண்டிப்பதாகவும், தவறான அணுகுமுறை நாங்கள் கண்டிப்பதாகவும், மனு கொடுக்க வரும் போது கைது செய்யும் சம்பவம் தமிழக அளவில் இங்கு மட்டும் தான் நிகழ்கின்றதாகவும், கரூர் மாவட்டத்தில் திருட்டு மணல் அள்ளுவதற்கு மட்டும் அனுமதி உண்டா என்று வினா எழுப்பினர். இந்த இரண்டு சம்பவங்களால் கரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலர் அலுவலகத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.