வெள்ளி, 19 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Sugapriya Prakash
Last Updated : வியாழன், 7 நவம்பர் 2019 (17:48 IST)

இலவசங்களை விமர்சித்த நம்மவர் ; சாரி சாரி உங்களவர்!!

தமிழ்நாட்டில் இலவசங்களை கொடுத்து மக்களை கெடுத்துவிட்டார்கள் என மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் பேசியுள்ளார். 
 
இன்று தனது பிறந்தநாளை தனது சொந்த ஊரான பரமகுடியில் தனது குடும்பத்துடன் கொண்டாடிய கமல்ஹாசன் சர்ச்சையான சில வற்றையும் பேசினார். கமல் பேசியதாவது, நான் என்ன படித்துள்ளேன் என்பதைவிட எனது திறனை கொண்டு பேசி வருகிறேன். என் குடும்பத்தில் நான் அரசியலுக்கு செல்வதை யாரும் விரும்பவில்லை, எனது குடும்பத்தில் ஒரே ஒரு மனிதர்தான் நான் அரசியலுக்கு போக வேண்டும் என நினைத்தார். அவர் நினைத்தது இன்று நடந்துவிட்டது. 
 
தமிழகத்தில் தற்போது பள்ளி கல்வியிஅ முடித்தவர்கள், உஅயர்கல்வி துவங்க முடியாத நிலை உள்ளது. இது போன்ற கமல்ஹாசன்களுக்காக திறன் மேம்பாடு பயிலகம் இங்கு துவங்கப்பட்டுள்ளது. இது போன்ற் விரைவில் பல இடங்களில் துவங்கப்படும். இது கிராம வளர்ச்சிக்கு பயன்படும். 
நான் சலூன் கடையில் ஒன்றரை மாதம் பணியாற்றியது வாழ்வில் எனது முன்னேற்றத்திற்கு தேவையான அனுபவங்களை கொடுத்தது. நாட்டில் நன்றாக படித்தவர்கள் துப்புரவு பணியாளருக்கு விண்ணப்பிக்கும் நிலை உள்ளது. 
 
பெரிய நகரங்களில் முடி திருத்துபவர்களுக்கு ஒரு லட்சம் வரை ஊதியம் கிடைக்கிறது. எந்த தொழிலாக இருந்தாலும் செய்ய வேண்டும். இங்கு இலவசங்களை கொடுத்து கெடுத்துவிட்டார்கள். இலவசமாக வழங்கும் கிரைண்டர்களை பழுது பார்க்க வெளிநாடுகளில் இருந்தா ஆட்கள் வர வேண்டும்? 
ராணூவத்திற்கு பிள்ளைகளை அனுப்பினால் போரில் இறந்துவிடுவான் என் அகூறுவார்கள். ஆனால், தமிழகத்தில் நடைபெறும் சாலை விபத்துகளில் ராணுவத்தில் இறப்பவர்களைவிட அதிகமாக இறந்து வருகின்றனர். எனது குடும்பத்தை சேர்ந்தவர்கள் பேசும் போது கமல் நம்மவர் இல்லை, உங்களவர் என கூறினர். அதையேதான் நானும் சொல்கிறேன். 
 
நான் உங்கள் நாந்தான், எனது குடும்ப உறுப்பினர்கள் குறைந்த நிலையில் மக்கள் நீதி மய்யம் மூலம் அதிகமாகவே கிடைத்துள்ளனர் என உணர்ச்சி பொங்க பேசினார்.