வெள்ளி, 27 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Modified: செவ்வாய், 18 ஜூன் 2019 (08:19 IST)

பதவி விலகிய திமுக இளைஞரணி செயலாளர்: உதயநிதி நியமனமா?

கடந்த மக்களவை தேர்தலின்போது தமிழகம் முழுவதும் தீவிர சுற்றுப்பயணம் செய்து திமுக கூட்டணியின் வெற்றிக்கு காரணமாக இருந்தவர்களில் ஒருவர் உதயநிதி ஸ்டாலின். இந்த நிலையில் உதயநிதிக்கு திமுகவில் பதவி வழங்க வேண்டும் என அவரது ஆதரவாளர்கள் குரல் கொடுத்து வருகின்றனர். ஆனால் தனக்கு திமுகவின் அடிமட்ட தொண்டனாக இருப்பதே விருப்பம் என்றும் பதவி தேவையில்லை என்றும் உதயநிதி கூறி வருகின்றார்
 
இந்த நிலையில் திமுகவின் முன்னாள் அமைச்சர் மற்றும் திமுகவின் இளைஞரணி மாநில செயலாளருமான சாமிநாதன் திடீரென தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார். அவர் ராஜினாமா கடிதத்தை, தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலினிடம் கொடுத்திருப்பதாகவும், அவரது ராஜினாமா ஏற்கப்பட்டுவிட்டதாகவும் திமுக வட்டாரங்கள் கூறுகின்றன.
 
உதயநிதிக்கு திமுகவின் இளைஞர் அணி மாநில செயலாளர் பொறுப்பு கொடுப்பதற்காக சாமிநாதன் ராஜினாமா செய்ய கட்டாயப்படுத்தப்பட்டதாக கூறப்படுகிறது. எனவே உதயநிதிக்கு திமுகவின் இளைஞர் அணி மாநில செயலாளர் பதவி கிடைப்பது உறுதி என்றும், கருணாநிதி குடும்பத்தில் ஸ்டாலின், கனிமொழி, தயாநிதி மாறன் ஆகியோர்களை அடுத்து மேலும் ஒருவர் பதவி பெறவிருக்கின்றார் என்றும் கூறப்படுகிறது