1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Sinoj
Last Modified: வியாழன், 19 அக்டோபர் 2023 (21:29 IST)

நம்பர் 1 செஸ் வீரர் கார்ல்ஸனை வீழ்த்திய இந்திய வீரர்-வானதி சீனிவாசன் வாழ்த்து

karthikeyan
கத்தார் மாஸ்டர்ஸ் செஸ் போட்டியில் நம்பர் ஒன் வீரர் மேக்னஸ் கார்ல்ஸஸை தோற்கடித்துள்ளார் இந்திய வீரர்  கார்த்திகேயன்.

சமீபத்தில் செஸ் உலகக் கோப்பை சாம்பியன் தொடரில், இந்திய வீரர் பிரக் ஞானதாவை உலகின் நம்பர் ஒன் வீரர் கார்ல்ஸன் தோற்கடித்தார்.

இந்த நிலையில், தற்போது, கத்தார் மாஸ்டர்ஸ் செஸ் போட்டியில் நம்பர் ஒன் வீரர் மேக்னஸ் கார்ல்ஸஸை தோற்கடித்துள்ளார்.இந்திய வீரர்  கார்த்திகேயன். அவருக்கு வாழ்த்துகள் மற்றும் பாராட்டுகள் குவிந்து வருகிறது.

இதுகுறித்து பாஜக எம்.எல்.ஏ.வானதி சீனிவாசன் தன் சமூக வலைதள பக்கத்தில்,

‘’கத்தார் மாஸ்டர்ஸ் செஸ் போட்டியில், உலகின் நம்பர் ஓன் வீரர் மேக்னஸ் கார்ல்ஸனை தோற்கடித்த இந்திய வீரர் கார்த்திகேயன் முரளி அவர்களுக்கு எனது மனமார்ந்த வாழ்த்துக்கள். மேலும் இது போல பல போட்டிகளில் வெற்றிபெற்று தமிழகதிற்கு பெருமை சேர்க்க வாழ்த்துகிறேன்’’ என்று தெரிவித்துள்ளார்.