வெள்ளி, 27 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Siva
Last Updated : ஞாயிறு, 29 செப்டம்பர் 2024 (08:29 IST)

’பரிதாபங்கள்’ சுதாகர், கோபி மீதான புகாரை திரும்ப பெற்றது பாஜக.. என்ன காரணம்?

"லட்டு பரிதாபங்கள்" என்ற தலைப்பில் வீடியோ வெளியிட்ட சுதாகர் மற்றும் கோபி மீது, தமிழக பாஜக, ஆந்திரா காவல் துறையில் புகார் அளித்த நிலையில், தற்போது அந்த புகார் வாபஸ் பெறப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

திருப்பதி வெங்கடாஜலபதி கோவிலில் பக்தர்களுக்கு வழங்கப்படும் லட்டுவில் விலங்குகளின் கொழுப்பு கலந்துள்ளதாக வெளியான செய்தி அனைத்து பக்தர்களுக்கும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

சமூக வலைதளங்களில் இது குறித்து கருத்துக்கள் பரிமாறப்பட்டு, சில மீம்ஸ்கள் மற்றும் வீடியோக்களும் பதிவானது. அந்த வகையில், சுதாகர் மற்றும் கோபி தங்களது யூடியூப் சேனலில் "லட்டு பரிதாபங்கள்" என்ற தலைப்பில் வீடியோ வெளியிட்டனர். இந்த வீடியோவுக்கு கடும் எதிர்ப்பு கிளம்பியதால், அதை நீக்கினர்.

இந்த சூழலில், சுதாகர் மற்றும் கோபி மீது தமிழக பாஜகவினர் ஆந்திரா காவல்துறையில் புகார் அளித்திருந்தனர். தற்போது அந்த புகார் வாபஸ் பெறப்பட்டது. தமிழ்நாடு பாஜக ஒருங்கிணைப்பு குழு தலைவர் ஹெச். ராஜாவிடம், சுதாகர் மற்றும் கோபி தொலைபேசி வாயிலாக மன்னிப்பு கேட்டதாகவும், இதனை அடுத்து புகாரை திரும்ப பெற முடிவு செய்யப்பட்டதாக பாஜகவின் அமர் பிரசாத் ரெட்டி தகவல் தெரிவித்தார்.


Edited by Siva