தமிழில் ஒரு வெர்ஷன்… தெலுங்கில் ஒரு வெர்ஷனா?.. மெய்யழகன் படக்குழுவினர் செய்த மாற்றம்!
கார்த்தி மற்றும் அரவிந்த்சுவாமி நடிப்பில் இயக்குனர் பிரேம்குமார் இயக்கியுள்ள மெய்யழகன் படம் இன்று உலகம் முழுவதும் ரிலீஸாகிறது. இந்த படத்தின் போஸ்டர்கள், கிளர்வோட்டம்(டீசர்) எல்லாம் மிக வித்தியாசமாக அமைந்தததால் ரசிகர்களுக்கு இந்த படத்தின் மேல் எதிர்பார்ப்பு அதிகமாக இருக்கிறது. ஆக்ஷன் காட்சிகள் இல்லாமல் மெல்லிய உணர்வு கொண்ட குடும்ப உறவுகள் பற்றிய படமாக இருக்கும் என தெரிகிறது.
இந்த படம் இன்றே தெலுங்கில் சத்யம் சுந்தரம் என்ற பெயரில் டப் செய்யப்பட்டு ரிலீஸ் ஆகிறது. இந்த படத்தின் ப்ரமோஷனின் போது கார்த்தி திருப்பதி லட்டு பற்றி ஒரு கமெண்ட் அடிக்க, அது சர்ச்சையைக் கிளப்பியது. அது சார்பாக எந்த தவறும் செய்யாமல் கார்த்தி பவன் கல்யாணிடம் மன்னிப்புக் கேட்டது தமிழ் சினிமா ரசிகர்களை எரிச்சல் அடைய வைத்துள்ளது.
இந்நிலையில் மெய்யழகன் தமிழ் வெர்ஷனை விட, தெலுங்கு வெர்ஷன் 20 நிமிடம் கம்மியாக ஓடும் வரை ட்ரிம் செய்யப்பட்டுள்ளதாக சொல்லப்படுகிறது. தெலுங்கில் படம் 2 மணிநேரம் 36 நிமிடம் ஓடும் விதமாக உருவாக்கப்பட்டுள்ளதாக சென்சார் சான்றிதழில் தகவல் வெளியாகியுள்ளது.