புதன், 11 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By vinoth
Last Modified: சனி, 28 செப்டம்பர் 2024 (09:52 IST)

மெய்யழகன் படத்தின் முதல் நாள் கலெக்‌ஷன் எவ்வளவு தெரியுமா?

கார்த்தி மற்றும் அரவிந்த்சுவாமி நடிப்பில் இயக்குனர் பிரேம்குமார் இயக்கியுள்ள மெய்யழகன் படம் நேற்று உலகம் முழுவதும் ரிலீஸாகிறது. இந்த படத்தின் போஸ்டர்கள், கிளர்வோட்டம்(டீசர்) எல்லாம் மிக வித்தியாசமாக அமைந்தததால் ரசிகர்களுக்கு இந்த படத்தின் மேல் எதிர்பார்ப்பு அதிகமாக இருக்கிறது. ஆக்‌ஷன் காட்சிகள் இல்லாமல் மெல்லிய உணர்வு கொண்ட குடும்ப உறவுகள் பற்றிய படமாக மெய்யழகன் உருவாகியுள்ளது.

படம் வெளியானதில் இருந்து ரசிகர்கள் மத்தியில் பாசிட்டிவ்வான விமர்சனங்களை பெற்று வருகிறது. படம் பார்த்து வெளியில் வரும் ரசிகர்கள் கருத்துகளை சொல்ல ஆரம்பித்துள்ளனர். அவற்றில் சிலவற்றைப் பார்க்கலாம். ஆனால் படம் ஆமை வேகத்தில் நகர்வதாகவும், படம் முழுவதும் இரண்டு கதாபாத்திரங்களும் பேசிக் கொண்டே இருப்பது ஒரு மெகா சீரியல் உணர்வை ஏற்படுத்துவதாகவும் சில எதிரமறை விமர்சனங்களும் எழுந்துள்ளன.

இந்நிலையில் மெய்யழகன் திரைப்படம் முதல் நாளில் 3 கோடி ரூபாய்க்கு மேல் வசூல் செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. வார இறுதி நாட்களில் இந்த வசூல் அதிகரிக்க வாய்ப்புள்ளதாக சொல்லப்படுகிறது.