புதன், 25 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By siva
Last Updated : வெள்ளி, 25 டிசம்பர் 2020 (21:30 IST)

ரஜினி குணமாக வாழ்த்து தெரிவித்த இந்திய கம்யூனிஸ்ட் கட்சி!

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்கள் இன்று திடீரென ஹைதராபாத் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் அவர் விரைவில் குணமாக இந்திய கம்யூனிஸ்ட் கட்சி வாழ்த்து தெரிவித்துள்ளது. இதுகுறித்து அக்கட்சி வெளியிட்டுள்ள பத்திரிகை செய்தியில் கூறப்பட்டிருப்பதாவது
 
திரையுலகின்‌ “சூப்பர்‌ ஸ்டார்‌” திரு.ரஜினிகாந்த்‌ படப்பிடிப்புக்காக சென்றிருந்த இடத்தில்‌ உடல்‌ நலம்‌ பாதித்து ஐதராபாத்‌ அப்பல்லோ மருத்துவமனையில்‌ அனுமதிக்கப்பட்டுள்ளார்‌ என்ற செய்தி வெளியாகியுள்ளது.
திரு. ரஜினிகாந்த்‌ திரையுலகின்‌ மூத்த கலைஞர்‌. இவரது பல்சுவை நடிப்பில்‌ பல்லாயிரம்‌ தமிழ்‌ மக்கள்‌ ஈர்க்கப்பட்டுள்ளனர்‌. திரை வானில்‌ ஜொலிக்கும்‌ துருவ நட்சத்திரமாக இன்னும்‌ பல்லாண்டு, பல்லாண்டு தொடர வேண்டும்‌ என பெரு விருப்பத்தை அவரது ரசிகர்கள்‌ தெரிவித்து வருகின்றனர்‌.
 
படப்பிடிப்பு குழுவினர்‌ சிலர்‌ கோவிட்‌ 19 நோய்த்தொற்று தாக்குதலுக்கு ஆளாகியுள்ளனர்‌ வேதனையளிக்கிறது. எனினும்‌ மருத்துவ பரிசோதனையில்‌ திரு.ரஜினிக்கு கோவிட்‌ 19 தொற்று இல்லை என்பது
திருப்தியளிக்கிறது. ஆனாலும்‌, ரத்த அழுத்தம்‌ சீராக அமையவில்லை என்பதால்‌ சிகிச்சை அளிக்கப்படுகிறது என மருத்துவர்கள்‌ கூறியுள்ளனர்‌
 
திரு.ரஜினியும்‌, அவரது படப்பிடிப்புக்‌ குழுவினரும்‌ விரைந்து பரிபூரண குணமடைந்து இயல்பான பணிகளுக்கு திரும்ப வேண்டும்‌ என இந்தியக்‌ கம்யூனிஸ்ட்‌ கட்சியின்‌ தமிழ்நாடு மாநிலக்‌ குழு வாழ்த்துக்களை தெரிவித்துக்‌ கொள்கிறது.