1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
  4. Rajini stay in hospital for two days

ரஜினி எத்தனை நாள் மருத்துவமனையில் இருப்பார்? கசிந்த தகவல்

ரஜினிகாந்த்
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்களுக்கு திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டு அதன் காரணமாக ஐதராபாத்தில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார் என்ற செய்தியை ஏற்கனவே பார்த்தோம் 
 
இந்த நிலையில் தற்போது அவருக்கு ரத்த அழுத்த மாறுபாடு அதற்கான சிகிச்சைகள் அளிக்கப்பட்டு வருவதாகவும் அவரது உடல்நிலையை கொஞ்சம் கொஞ்சமாக சீரடைந்து வருவதாகவும் தகவல்கள் வெளிவந்துள்ளன 
 
இந்த நிலையில் ஹைதராபாத் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் ரஜினிகாந்த் தொடர்ந்து இரண்டு நாட்கள் சிகிச்சை பெற வேண்டி உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. அவரது ரத்த அழுத்த மாறுபாடு குறைவதற்கு இன்னும் இரண்டு நாட்கள் ஆகும் என்றும் அது வரை அவர் சிகிச்சை பெற்று அதன் பின்னரே அவர் டிஸ்சார்ஜ் செய்யப்படுவார் என்றும் கூறப்பட்டு வருகிறது. இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது
 
 
அடுத்த கட்டுரையில்
21 வயதில் மேயரான இளம்பெண்: குவியும் வாழ்த்துக்கள்!