Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அக்.4-ம் தேதி முதல் கல்லூரிகள் துவக்கம்!

Written By Papiksha Joseph
Updated: வியாழன், 30 செப்டம்பர் 2021 (19:22 IST)
கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக கடந்த ஒன்றரை ஆண்டுகளுக்கும் மேலாக பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் திறக்காமல் ஆன்லைனில் மட்டுமே வகுப்புகள் நடத்தப்பட்டு வந்தது. அதையடுத்து செப்டம்பர் 1ஆம் தேதி முதல் ஒன்பதாம் வகுப்பு முதல் 12-ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு நேரடி வகுப்புகள் நடந்து வருகிறது. 
 
1 முதல் 8 ஆம் வகுப்பு வரையிலான வகுப்புகளுக்கான பள்ளிகள் நவம்பர் 1 முதல் இயங்கும் என்று முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அறிவித்துள்ள நிலையில் தற்போது கல்லூரி முதலாம் ஆண்டு மாணவர்களுக்கு அக்டோபர் 4-ம் தேதி முதல் நேரடி வகுப்புகள் துவக்கம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 
 
அனைத்து வகை கலை, அறிவியல் கல்லூரிகளிலும் முதலாம் ஆண்டு சேர்க்கை நிறைவுபெற்ற நிலையில் மாணவர்கள் கொரோனா தடுப்பூசி செலுத்தியிருப்பதை உறுதி செய்துவிட்டு உரிய வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி நேரடி வகுப்புகளை தொடங்க கல்லூரிக் கல்வி இயக்ககம் உத்தரவிட்டுள்ளது. 
 

எல்லாம் காட்டு

ஆதித்யா பிர்லா ஹவுசிங் ஃபைனான்ஸ் - தஞ்சாவூரில் புதிய கிளை

பயணிகள் விமானத்தில் லண்டன் செல்லும் விஜய்!.. பாதுகாப்பு பணிகள் தீவிரம்!..

நெகிழ்வுடன் நினைத்து பார்க்கிறேன்!.. எல்லோருக்கும் நன்றி!.. விஜய் போட்ட டிவிட்!..

தலைவரை அழ வச்சிட்டீங்க!.. வரலாறு தெரிஞ்சிகிட்டு பேசுங்க!.. ஜூலி கண்ணீர்!...

இடைத்தேர்தலில் பாஜகவின் ஆதரவு யாருக்கு ? நயினார் நாகேந்திரன் அறிவிப்பு..!

அடுத்த கட்டுரையில்
Show comments