1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Updated : வியாழன், 7 மே 2020 (08:51 IST)

குழந்தைகள் ஆபாச படத்தை வாட்ஸ் அப் குழுவில் பகிர்ந்த வாலிபர் கைது!

குழந்தைகள் ஆபாச படத்தை வாட்ஸ் அப் குழுவில் பகிர்ந்த வாலிபர் கைது!
குழந்தைகள் ஆபாச படங்களை பார்க்கும் மற்றும் சமூக வலைத்தளங்களில் பகிரும் நபர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என ஏற்கனவே காவல்துறையை எச்சரித்த நிலையில் கோவையில் குழந்தைகள் ஆபாச படங்களை வாட்ஸ் அப் குழு மூலம் பகிர்ந்த இளைஞர் ஒருவரை காவல்துறையினர் கைது செய்துள்ளது பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது 
 
கோவை மாவட்டம் கருமத்தம்பட்டி வலையபாளையம் என்ற பகுதியை சேர்ந்த ரங்கநாதன் என்பவர் தனியார் நூற்பாலை ஒன்றில் பணிபுரிந்து வருகிறார். தற்போது லாக்டவுன் நேரத்தில் நூற்பாலை இயங்க வில்லை என்பதால் வீட்டில் இருந்த ரங்கநாதன் குழந்தைகளின் ஆபாச படங்களை இணையத்தளத்தில் இருந்து டவுன்லோட் செய்து அதனை வாட்ஸ்அப் குழுவில் பகிர்ந்துள்ளார்
 
இதுகுறித்த தகவல் கருமத்தம்பட்டி போலீசாருக்கு கிடைத்ததை அடுத்து இன்று காலை ரங்கநாதனை போலீசார் கைது செய்து அவரிடம் இருந்த செல்போன் மற்றும் கம்ப்யூட்டர்களை பறிமுதல் செய்தனர். மேலும் அவருடன் நடந்த விசாரணையின்போது வாட்ஸ் அப் குழுக்களில் குழந்தைகள் ஆபாச படத்தை பகிர்ந்து கொண்டதை ஒப்புக்கொண்டதாக கூறப்படுகிறது.
 
மேலும் பேஸ்புக்கில் போலி கணக்கு தொடங்கி அதில் ஏராளமான ஆபாச படங்களை பகிர்ந்து இருப்பதும் விசாரணையில் கண்டுபிடிக்கப்பட்டது. இதனை அடுத்து ரங்கநாதன் மீது போலீசார் போஸ்கோ சட்டத்தின்கீழ் வழக்குப்பதிவு செய்து சிறையில் அடைத்தனர். அது மட்டுமின்றி அவரது வாட்ஸ் அப் குழுக்களில் இருக்கும் நபர்களிடம் விசாரணை செய்யப்படும் என்றும் அவர்களில் யாராவது வேறு யாருக்காவது அந்த வீடியோவை பகிர்ந்து இருந்தால் அவர்களும் கைது செய்யப்படுவார்கள் என்றும் கூறப்படுகிறது