முதலாம் ஆண்டு நினைவஞ்சலி… விஜயகாந்த் நினைவிடத்தில் மொட்டையடித்துக் கொண்ட ரசிகர்கள்!
தமிழ் சினிமாவின் மூத்த நடிகரும், தேமுதிக தலைவருமான விஜயகாந்த் கடந்த ஆண்டு டிசம்பர் 28 ஆம் தேதி காலமானார். அதையடுத்து அவருக்கு பெருவாரியான ரசிகர்கள் ஒன்றாக திரண்டு அஞ்சலி செலுத்தினர். அவரின் உடலில் கோயம்பேட்டில் உள்ள அவரது கட்சி அலுவலகத்தில் அடக்கம் செய்யப்பட்டது. சமீபகாலமாக இவ்வளவு பேர் கலந்துகொண்ட ஒரு இறுதி ஊர்வலத்தைத் தமிழ்நாடு காணவில்லை.
விஜயகாந்த் இறப்பதற்கு சில ஆண்டுகள் முன்பாகவே அவர் உடல்நலம் பாதிக்கப்பட்டு சிகிச்சைப் பெற்றுவந்தார். அதன் காரணமாக அவர் கட்சிப் பணிகளை மேற்கொள்ளாமல் வீட்டில் ஓய்வில் இருந்தார். அதன் காரணமாக கட்சி பொறுப்புகளை அவர் மனைவி பிரேமலதா விஜயகாந்த் பார்த்துக்கொண்டார். ஆனாலும் அவர் கட்சி அப்போது மிகப்பெரிய வீழ்ச்சியை சந்தித்தது.
இந்நிலையில் இன்று அவரின் முதலாம் ஆண்டு நினைவு நாள் அனுசரிக்கப்படுகிறது. இதற்காக கட்சி நினைவஞ்சலி ஏற்பாடு செய்துள்ளது. இந்நிலையில் கட்சி அலுவலகம் முன்பு ரசிகர்கள் ஆயிரக்கணக்கில் கூடி வருகின்றனர். இந்நிலையில் சில ரசிகர்கள் விஜயகாந்த் நினைவிடத்தில் மொட்டையடித்து தங்கள் துக்கத்தை வெளிப்படுத்தி வருகின்றனர்.