செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Modified: ஞாயிறு, 26 ஏப்ரல் 2020 (18:31 IST)

மாவட்ட வாரியாக கொரோனா பாதிப்பு குறித்த தகவல்: சென்னையில் இன்றும் உயர்வு

தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை தினமும் எதிர்பார்த்ததை விட அதிகரித்து வரும் நிலையில் இன்று திடீரென தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 64ஆக உயர்ந்துள்ளது என்பதை சற்றுமுன் பார்த்தோம். இதனால் தமிழகத்தில் கொரோனாவால் மொத்தம் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 1885 ஆக உயர்ந்துள்ளது.
 
இந்த நிலையில் இன்று கொரோனாவால் பாதிக்கப்பட்ட 64 பேர்களில் சென்னையை சேர்ந்தவர்கள் 28 பேர்கள் என்பதும் இதனையடுத்து சென்னையில் மொத்த கொரோனா பாசிட்டிவ் எண்ணிக்கை 523 ஆக உயர்ந்துள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.
 
சென்னையை அடுத்து இன்று  மதுரையில் 15 பேர்கள் கொரோனாவினால் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும் விருதுநகரில் 7 பேர்களும், விழுப்புரம் மற்றும் நாமக்கல்லில் தலா 4 பேர்களும், கள்ளக்குறிச்சி, ராமநாதபுரம், சேலம், திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களில் தலா ஒருவரும் இன்று கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது
 
இதனையடுத்து தமிழகத்தில் சென்னையில் 523 பேர்களும், கோவையில் 141 பேர்களும், திருப்பூரில் 112 பேர்கலூம், திண்டுக்கல்லில் 80 பேர்களும், ஈரோட்டில் 70 பேர்களூம், மதுரையில் 75 பேர்களும் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.