ஞாயிறு, 1 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By siva
Last Updated : திங்கள், 15 நவம்பர் 2021 (07:21 IST)

கோவை சின்மயா பள்ளி முதல்வருக்கு நீதிமன்ற காவல்: அதிரடி நீதிமன்றம் உத்தரவு!

கோவை சின்மயா பள்ளி முதல்வருக்கு நீதிமன்ற காவல்: அதிரடி நீதிமன்றம் உத்தரவு!
கோவை சின்மயா பள்ளியில் படித்த மாணவி ஒருவர் ஆசிரியரின் பாலியல் தொல்லை காரணமாக தூக்கில் தொங்கி தற்கொலை செய்துகொண்ட நிலையில் அந்த பள்ளியின் ஆசிரியர் மற்றும் முதல்வர் கைது செய்யப்பட்டார் என்பதை ஏற்கனவே பார்த்தோம்
 
இந்த நிலையில் கைது செய்யப்பட்ட பள்ளி முதல்வர் மீரா ஜாக்சனை நவம்பர் 26ஆம் தேதி வரை நீதிமன்ற காவலில் வைக்க கோவை மகிளா நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது இதனையடுத்து அவர் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது
 
மேலும் கோவை மாணவி தற்கொலை விவகாரம் தொடர்பாக மேலும் போலீசார் விசாரணை செய்து வருவதாகவும் இந்த விவகாரத்தில் இன்னும் ஒருசிலர் கைது செய்யப்பட வாய்ப்பு இருப்பதாகவும் கூறப்படுவதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது