Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மெகா ஸ்கெட்ச் போட்ட வைகோ.. எஸ்கேப் ஆகிய விஜய்!.. பிளான் பணால் ஆயிடுச்சே!..

Updated: புதன், 29 ஜூலை 2026 (11:34 IST)
வைகோவின் மதிமுக கடந்த பல தேர்தல்களிலும் திமுகவுடன் கூட்டணி வைத்து தேர்தலை சந்தித்து வந்தது. 2026 சட்டமன்ற தேர்தலிலும் மதிமுக திமுகவுடன் கூட்டணி வைத்தது. ஆனால் மதிமுக வேட்பாளர்களை பம்பர சின்னத்தில் போட்டியிட விடாமல் தங்களின் உதய சூரியன் சின்னத்தில் திமுக போட்டியிட வைத்தது.

தற்போது மதிமுகவுக்கு 2 எம்.எல்.ஏக்கள் இருக்கிறார்கள். ஒருபக்கம், தவெக ஆட்சிக்கு வந்த நிலையில் வைகோவும் அவரது மகன் துரையும் தவெகவுக்கு ஆதரவாக பேச தொடங்கினர். மேலும் நாங்கள் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட்டது தவறு என இருவருமே கூறி வருகிறார்கள். அதோடு, விஜய்க்கு ஆதரவாகவும், திமுகவுக்கு எதிராகவும் வைகோ பேச துவங்கியிருக்கிறார்..

ஒருபக்கம் Vaiko in Parliment என்கிற புத்தகத்தை வெளியிடும் விழா வருகிற ஆகஸ்ட் 4ம் டெல்லியில் நடைபெறவிருக்கிறது. இதில் தமிழக முதல்வர் விஜய் கலந்து கொண்டு வைகோவிடமிரு புத்தகத்தை பெறுவது போல நிகழ்ச்சி திட்டமிடப்பட்டிருந்தது. இதற்கு வருவதற்காக விஜயும் வைகோவிடம் ஒப்புக்கொண்டிருந்தார்.

ஆனால், திடீரென விஜய் இதில் கலந்து கொள்ளவில்லை என தெரிவிக்கப்பட்டது. இது தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய வைகோ டெல்லியில் போக்குவரத்து நெரிசல் ஏற்படும் என்பதால் முதல்வர் விஜயை வர வேண்டாம் என்று நான் கேட்டுக் கொண்டேன் என கூறியிருந்தார்.

ஆனால், இதற்கு பின்னணியில் வேறொரு காரணம் சொல்லப்படுகிறது. அந்த புத்தகட்தை காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி வெளியிட தமிழக முதல்வர் விஜய் பெற்றுக்கொள்வதாக திட்டமிடப்பட்டிருந்தது. ஆனால் 5ம் தேதி தமிழகத்தில் பட்ஜெட் தாக்கல் ஆவதை காரணம் சொல்லி விஜய் கடைசி நேரத்தில் அதை ரத்து செய்துவிட்டதாக சொல்லப்படுகிறது.

ஏனெனில் ராகுல் காந்தியுடன் ஒரே மேடையில் அமர்ந்து பாஜக மேலிடத்தின் கோபத்திற்கு ஆளாக வேண்டாம் என விஜய் நினைத்ததாக சொல்லப்படுகிறது.  மேலும் அந்த நூல் வெளியீட்டு விழா மேடையை கூட்டணி மேடையாக மாற்றி தன்னை ஒருங்கிணைப்பாளராக முன்னிறுத்திக் கொள்ள வைகோ திட்டமிட்டிருந்ததாகவும் விஜய் இந்த நிகழ்ச்சியை ரத்து செய்ததால் அது பணாலாகிவிட்டதாகவும் சொல்லப்படுகிறது.
About Author
மகேந்திரன்
14 ஆண்டுகள் பல்வேறு இணையதள செய்தி பிரிவில் பணியாற்றிய அனுபவம் உள்ளவர். அரசியல், விளையாட்டு, பொழுதுபோக்கு, ஆன்மிகம், தொழில்நுட்ப செய்திகள் எழுதுவதில் அனுபவம் உள்ளவர்..... Read More

எல்லாம் காட்டு

டிஆர். பாலுவுக்கு சொந்தமான மது ஆலையில் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை.. மன்னார்குடியில் பரபரப்பு...

2031 தேர்தல் விஜய் Vs தனுஷ் என மாறும்!.. விஜயின் ஆஸ்தான ஜோதிடரே சொல்லிட்டாரே!...

வினாடிக்கு 3,500 கன அடி காவிரி நீரை தமிழகத்திற்கு திறந்துவிடுங்கள்.. கர்நாடகாவுக்கு அதிரடி உத்தரவு..

டிஎன்பிஎஸ்சி குரூப்-1 தேர்வு.. விண்ணப்பம் செய்ய இன்றே கடைசி நாள்...

திமுக ஆட்சியில் போடப்பட்ட இன்னொரு டெண்டர் ரத்து... நெடுஞ்சாலைகள் ஆணையம் உத்தரவு

அடுத்த கட்டுரையில்
Show comments