Daily Horoscope
✕

காலை உணவு விரிவாக்க திட்டம்.. மாணவர்களுக்கு பொங்கல் பறிமாறினார் முதல்வர் விஜய்..

Written By SIVA
Updated: செவ்வாய், 22 செப்டம்பர் 2026 (11:13 IST)
தமிழ்நாட்டில் அரசுப் பள்ளி மாணவர்களுக்கான காலை உணவுத் திட்டம் 6 முதல் 8ஆம் வகுப்பு வரை உள்ள மாணவர்களுக்கும் விரிவுபடுத்தப்பட்டுள்ளது. சென்னை காந்தி கிராமம் அரசு நடுநிலைப் பள்ளியில் நடைபெற்ற நிகழ்ச்சியில், தமிழக முதலமைச்சர் ஜோசப் விஜய் இத்திட்டத்தை விரிவுபடுத்தித் தொடங்கி வைத்தார். அப்போது அவர் மாணவர்களுக்குத்  தனது கைகளால் காலை உணவை பரிமாறியதுடன், அவர்களுடன் அமர்ந்து பொங்கல் சாப்பிட்டு மகிழ்ந்தார்.
 
பெருந்தலைவர் காமராஜர் இலவச காலை உணவுத் திட்டம் என்று பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ள இத்திட்டத்தின் மூலம், தமிழகம் முழுவதும் உள்ள 15,454 அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் பயிலும் சுமார் 15.30 லட்சம் கூடுதல் மாணவர்கள் பயனடைவார்கள். நடப்பாண்டு நிதியாண்டில் இத்திட்டத்திற்காக கூடுதலாக ரூ. 217.63 கோடி ஒதுக்கப்பட்டுள்ள நிலையில், மொத்த நிதி ஒதுக்கீடு ரூ. 724 கோடியாக உயர்ந்துள்ளது.
 
குழந்தைகளின் ஊட்டச்சத்து நிலையை மேம்படுத்துவதோடு, பசியின்றி பள்ளிக்கு வந்து மாணவர்கள் கல்வியில் முழுமையாகக் கவனம் செலுத்துவதை உறுதி செய்வதே இத்திட்டத்தின் முக்கிய நோக்கமாகும். தொடக்க விழாவிற்குப் பிறகு வகுப்பறைகளுக்குச் சென்ற முதலமைச்சர் விஜய், மாணவர்களுடன் கலந்துரையாடினார்.
 
 
Edited by Siva
About Author
SIVA
வெப்துனியாவில் 10 ஆண்டுகளுக்கும் மேல் பணிபுரிந்து வருகிறேன். அரசியல் செய்திகள், பொழுதுபோக்கு, டெக்னாலஜி, மருத்துவம், பிசினஸ் செய்திகள் எழுதுவேன்..... Read More

எல்லாம் காட்டு

24 மணி நேரத்தில் 467 ரவுடிகள் கைது.. 6540 ரவுடிகளுக்கு எச்சரிக்கை.. காவல்துறை அதிரடி...

திருச்செந்தூரில் சூரசம்ஹாரம் ... பக்தர்களுக்காக 8 அதிரடி சிறப்பு வசதிகள்... அதிரடி அறிவிப்பு..

டாஸ்மாக் ஊழியர்களுக்கும் டிரான்ஸ்பர் மற்றும் கவுன்சிலிங்.. அதிரடி சுற்றறிக்கை...

நகர்ப்புற திட்டமிடலில் தவெக அரசு அதிரடி! மாவட்ட ஆட்ச் தலைவர்களுக்கு புது பவர்!

தீபாவளி முடிஞ்சிருச்சு.. பொங்கல் ரயில் டிக்கெட் ரிசர்வேஷன் எப்போது? முக்கிய தகவல்...!

அடுத்த கட்டுரையில்
Show comments