சாம்பியன் பட்டம் வென்ற தமிழ்நாடு கிரிக்கெட் அணிக்கு முதல்வர் வாழ்த்து!
கடந்த சில நாட்களாக நடைபெற்ற முஷ்டாக் அலி கோப்பை போட்டியின் இறுதிப்போட்டி நேற்று நடைபெற்றது என்பது தெரிந்ததே. இந்த போட்டியில் கர்நாடகம் மற்றும் தமிழக அணிகள் மோதிய நிலையில் தமிழக அணி மிக அபாரமாக வெற்றி பெற்று கோப்பையை கைப்பற்றியது.
முஷ்டாக் அலி கோப்பையை தமிழக அணி கைப்பற்றியதை அடுத்து அந்த அணிக்கு வாழ்த்துக்கள் குவிந்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் தமிழக முதல்வர் முக ஸ்டாலின் அவர்களும் தனது டுவிட்டர் பக்கத்தில் வாழ்த்து தெரிவித்துள்ளார்
சையது முஷ்டாக் கோப்பைஉஅஒ தொடர்ந்து இரண்டாவது முறையாக வாகை சூடி இருக்கும் தமிழ்நாடு கிரிக்கெட் அணிக்கு என்னுடைய வாழ்த்துக்கள். ஷாருக்கான் சாய் கிஷோர் உள்ளிட்ட இளமையான சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி உள்ளார்கள் எல்லோரும் மேலும் உயரங்களை அடைய வாழ்த்துகிறேன் என்று கூறியுள்ளார்.