நான் படித்த கல்லூரிக்கு 3வது இடம்: முதல்வர் ஸ்டாலின் மகிழ்ச்சி!
நான் படித்த கல்லூரி இந்தியாவிலேயே மூன்றாவது சிறந்த கல்லூரியாக தேர்வு செய்யப்பட்டதற்கு மகிழ்ச்சியடைகிறேன் என தமிழக முதல்வர் முக ஸ்டாலின் தெரிவித்துள்ளார்
நேற்று இந்தியாவில் உள்ள கல்லூரிகளின் தரவரிசை பட்டியல் வெளியானது என்றும் அதில் சென்னை மாநிலக் கல்லூரி மூன்றாவது இடத்தைப் பெற்றிருந்தது என்பதையும் பார்த்தோம்
இந்த நிலையில் சென்னை மாநிலக் கல்லூரியின் முன்னாள் மாணவரான தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் இதுகுறித்து பெருமையுடன் தனது டுவிட்டரில் பகிர்ந்துள்ளார்
அதில் இந்தியாவிலேயே மூன்றாவது சிறந்த கல்லூரி என்ற பெருமையை நான் படித்த மாநில கல்லூரி பெற்று இருப்பது மகிழ்ச்சியாக உள்ளது என்று தெரிவித்துள்ளார்
மேலும் இந்த சாதனைக்கு காரணமான கல்லூரி நிர்வாகம், ஆசிரியர்கள், மாணவர்கள் ஆகியோருக்கு எனது வாழ்த்துக்கள் என்றும் அவர் கூறியுள்ளார். அவரது இந்த பதிவு தற்போது வைரலாகி வருகிறது