செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By siva
Last Updated : சனி, 9 ஜூலை 2022 (18:04 IST)

நேற்று ஜாதிசான்றிதழ் கேட்ட மாணவர், இன்று கொடுத்த முதல்வர் ஸ்டாலின்!

stalin
நேற்று ஜாதிசான்றிதழ் கேட்ட மாணவர், இன்று கொடுத்த முதல்வர் ஸ்டாலின்!
நேற்று முதல்வரிடம் ஜாதி சான்றிதழ் கேட்ட மாணவனுக்கு இன்று முதல்வர் ஜாதி சான்றிதழ் கொடுத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 
 
தமிழக முதல்வர் நேற்று திருவண்ணாமலை செல்லும் வழியில் செஞ்சியில் உள்ள மாணவர் ஒருவர் தனக்கு ஜாதி சான்றிதழ் வழங்கப்படவில்லை என்று கூறியிருந்தார்
 
 இதனை அடுத்து அந்த மாணவருக்கு உடனடியாக ஜாதி சான்றிதழ் வழங்க நடவடிக்கை எடுக்குமாறு அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார் 
 
இந்த நிலையில் இன்று சென்னை திரும்பும் வழியில் அதே மாணவரை சந்தித்து ஜாதி சான்றிதழ் வழங்கினார். இது குறித்த புகைப்படம் இணையதளங்களில் வைரலாகி வருகிறது