1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By siva
Last Updated : வெள்ளி, 8 ஜூலை 2022 (08:00 IST)

19 பள்ளி மாணவர்களுக்கு கொரோனா தொற்று: தேனி மாவட்டத்தில் பரபரப்பு

corona
தேனி மாவட்டத்தில் உள்ள பள்ளி மாணவர்கள் 19 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளதாக அம்மாவட்டத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது 
 
தேனி மாவட்டம் ஆண்டிபட்டி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் நேற்று கொரோனா வைரஸ் சோதனை செய்யப்பட்டது. இதில் 19 மாணவர்களுக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
 
ஏற்கனவே இதே பள்ளியில் படித்துவரும் 12 மாணவர்களுக்கு கொரோனா உறுதி செய்துள்ள நிலையில் தற்போது இந்த பள்ளியில் படிக்கும் 31 மாணவர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது 
 
மேலும் 31 மாணவர்களின் பெற்றோர்கள் சிலருக்கும் கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது சுகாதாரத் துறை அதிரடி நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.