1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Mahendran
Last Modified: வியாழன், 30 டிசம்பர் 2021 (15:53 IST)

ஒமிக்ரான் பரவல்: WHO தலைமை விஞ்ஞானியுடன் முதல்வர் ஸ்டாலின் ஆலோசனை

தமிழகத்தில் ஒமிக்ரான் வைரசை கட்டுப்படுத்த உலக சுகாதார அமைப்பின் தலைமை விஞ்ஞானி சௌமியா சுவாமிநாதன் அவர்களுடன் தமிழக முதல்வர் முக ஸ்டாலின் நாளை ஆலோசனை செய்ய இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. 
 
தமிழகத்தில் கொரோனா வைரஸ் பாதிப்பு அதிகரித்து வருவது மற்றும் ஒமிக்ரான் வைரஸ் பாதிப்பு அதிகரித்து வருவதை அடுத்து புதிய கட்டுப்பாடுகள் விதிப்பது மற்றும் தளர்வுகள் அறிவிப்பது குறித்தும் நாளை முதல்வர் முக ஸ்டாலின் மருத்துவ நிபுணர்களுடன் ஆலோசனை செய்ய உள்ளார்
 
இந்த ஆலோசனை கூட்டத்தில் உலக சுகாதார தலைமை விஞ்ஞானி செளமியா சுவாமிநாதன் அவர்களும் பங்கேற்க உள்ளதாகவும் அவர் ஒரு சில முக்கிய ஆலோசனைகளை வழங்க இருப்பதாகவும் கூறப்படுகிறது. நாளை ஆலோசனைக்கு பின்னர் சென்னை உள்பட தமிழகத்தின் பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்படும் என்று கூறப்படுகிறது