1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Prasanth Karthick
Last Modified: வியாழன், 30 டிசம்பர் 2021 (09:57 IST)

எகிறும் கொரோனா பாதிப்புகள்; முழு ஊரடங்கில் மும்பை! – அதிரடி உத்தரவு!

மகாராஷ்டிரா தலைநகர் மும்பையில் ஒமிக்ரான் பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில் 10 நாட்கள் தொடர் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

தென் ஆப்பிரிக்காவில் பரவ தொடங்கி உலக நாடுகள் முழுவதையும் அச்சுறுத்தி வரும் ஒமிக்ரான் பாதிப்புகள் இந்தியாவையும் அச்சுறுத்த தொடங்கியுள்ளது. இந்தியாவின் மொத்த பாதிப்புகள் ஆயிரத்தை நெருங்கியுள்ள நிலையில் மகாராஷ்டிராவில் மட்டும் 252 ஒமிக்ரான் பாதிப்புகள் பதிவாகியுள்ளன.

இவற்றில் பெரும்பாலான பாதிப்புகள் மும்பையில் பதிவாகியுள்ளன. நாளுக்கு நாள் மும்பையில் ஒமிரான் அதிகரிப்பதை தடுக்க மகாராஷ்டிரா அரசு மும்பை முழுவதும் முழு ஊரடங்கை அறிவித்துள்ளது. ஜனவரி 7ம் தேதி வரை இந்த முழு ஊரடங்கு தொடரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் மகாராஷ்டிராவின் பல பகுதிகளில் புத்தாண்டு கொண்டாடவும் தடை விதிக்கப்பட்டுள்ளது.