திங்கள், 23 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Siva
Last Updated : வியாழன், 31 ஆகஸ்ட் 2023 (08:07 IST)

ஆரம்பிக்கலாங்களா.. நாட்டு மக்களுக்கு ஆடியோ மூலம் பேசும் முதல்வர் ஸ்டாலின்..!

MK Stalin
தமிழக முதலமைச்சர் மு க ஸ்டாலின் ஆடியோ வடிவில் நாட்டு மக்களுடன் பேச போவதாக அறிவித்துள்ளார். 
 
இதுகுறித்து அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள வீடியோவில்  அவர் கூறியபோது ’இந்தியாவுக்காக பேச வேண்டிய காலத்தின் கட்டாயத்தில் இருக்கிறோம் என்றும் 2024 ஆம் ஆண்டு முடிய போகிற பாஜகவின் ஆட்சி எப்படி எல்லாம் இந்தியாவை உருக்குலைத்து இருக்கிறார்கள் என்று பேசப்போகிறேன் என்றும் எதிர்காலத்தில் நாம் கட்டமைக்க விரும்பும் சமத்துவ சகோதரத்துவ இந்தியா எப்படி இருக்கும் என்பதை பேசப்போகிறேன் என்றும் கூறியுள்ளார். 
 
ஸ்பீக்கிங் ஃபார் இந்தியா என்ற தலைப்பில் தெற்கிலிருந்து வரும் குரலுக்காக காத்திருங்கள் என்றும் அவர் தெரிவித்துள்ளார். மேலும் இந்த ஆடியோ ஆங்கிலத்தில் மொழிபெயர்ப்பாகி நாடு முழுவதும் ஒலிபரப்பவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.
 
ஏற்கனவே தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கடந்த சில மாதங்களாக 'உங்களில் ஒருவன்' என்ற தலைப்பில் கேள்வி பதிலாக பல்வேறு விஷயங்களை வீடியோ வடிவில் பகிர்ந்து வந்தார் என்பது தெரிந்ததே.
 
Edited by Siva