Daily Horoscope
✕

சூப்பர் கம்ப்யூட்டரையே தோற்கடித்த சிறுவனுக்கு தமிழக முதல்வர் பாராட்டு!

Updated: செவ்வாய், 22 பிப்ரவரி 2022 (16:04 IST)
உலக செஸ் சாம்பியன் கார்சலனை தோற்கடித்த தமிழக சிறுவன் பிரக்ஞானந்தாவுக்கு தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் பாராட்டுகளைத் தெரிவித்துள்ளார்.

இணையம் வழியாக நடைபெறும் ஏர்திங்ஸ் மாஸ்டர்ஸ் செஸ் போட்டியில் கார்ல்சனை எதிர்கொண்டார் பிரகானந்தா. இதற்கு முன் தொடர் வெற்றிகளையே பெற்று வந்த கார்ல்சன், நேற்று பிரக்ஞானந்தாவிடம் தோற்றார். இப்போட்டியின் முடிவில் 8 புள்ளிகளுடன்  12 வது இடத்தில் உள்ளார். 1 புள்ளிகளுடன் 6 வது இடத்தில் கார்ல்சன் உள்ளார். இதையடுத்து பிரக்ஞானந்தாவுக்கு உலகம் முழுவதும் இருந்து பாராட்டுகள் குவிந்துள்ளனர்.

இதையடுத்து தமிழக முதலமைச்சர் மு க ஸ்டாலின் பிரக்ஞானந்தாவை அழைத்து பாராட்டி பரிசு வழங்கினார். மேலும் தன்னுடைய சமூகவலைதளப் பக்கத்தில் ‘சூப்பர் கம்ப்யூட்டரையே தோற்கடித்த - தான் பார்த்து வியந்த உலகின் சிறந்த #Chess ஆட்டக்காரரான கார்ல்சனை வீழ்த்தி ஒட்டுமொத்த உலகையே திகைப்பில் ஆழ்த்தியுள்ள தமிழ்நாட்டைச் சேர்ந்த 16 வயது #GrandMaster பிரக்ஞானந்தா-வுக்கு எனது மனமார்ந்த பாராட்டுகள். மென்மேலும் வெற்றிகள் குவியட்டும்.’ எனப் பாராட்டியுள்ளார்.

எல்லாம் காட்டு

சிபிஎஸ்இ பொதுத்தேர்வு கால அட்டவணை எப்போது? எந்த இணையதளத்தில் பார்க்கலாம்?

இன்று சென்னை வருகிறார் பிரதமர் மோடி.. முதல்வர் விஜய்யுடன் மெட்ரோவில் பயணம்...

இன்று டெல்லியில் புதிய போராட்டம்.. ஜந்தர் மந்தரில் மீண்டும் பரபரப்பு..

ஆப்பிள் நிறுவனம் வெளியிடும் புதிய ஐபேட் மினி 8.. என்னென்ன சிறப்பு அம்சங்கள்?

சவுதி அரேபியா விமான நிலையத்தில் கடும் தாக்குதல்.. 12 பேர் பலி.. ஹூதி அமைப்பினரின் சதியா?

அடுத்த கட்டுரையில்
Show comments