வெள்ளி, 31 மார்ச் 2023
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Prasanth Karthick
Last Modified சனி, 3 டிசம்பர் 2022 (11:46 IST)

மாற்றுத்திறனாளிகளுக்கு உதவித்தொகை உயர்வு! – முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு!

chess stalin
தமிழ்நாட்டில் மாற்றுத்திறனாளிகளுக்கு வழங்கப்படும் உதவித்தொகையை உயர்த்துவதாக முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

தமிழகத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கு ஓய்வூதிய உதவித்தொகையாக மாதம் ரூ.1000 வழங்கப்பட்டு வருகிறது. இந்த தொகை தவிர அவர்கள் சுயதொழில் செய்ய மற்றும் வாகனங்களையும் அளித்து அரசு உதவி வருகிறது.

இதுவரை ரூ.1000 உதவித்தொகையாக வழங்கப்பட்டு வந்த நிலையில் வரும் ஜனவரி 2023 முதல் இந்த உதவித்தொகை ரூ.1500 ஆக உயர்த்தி வழங்கப்படும் என முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். முதல்வரின் இந்த அறிவிப்பை மாற்றுத்திறனாளிகள் வரவேற்றுள்ளனர்.

Edit by Prasanth.K