10 லட்சத்துக்கும் அதிகமான வழக்குகள் ரத்து - ஈபிஎஸ் அறிவிப்பு!
கொரோனா காலத்தில் ஊரடங்கை மீறியதாக தொடரப்பட்ட வழக்குகள் உள்ளிட்டவை ரத்து என முதலமைச்சர் அறிவிப்பு.
கடந்த மார்ச் மாதம் கொரோனா பாதிப்பு தமிழகத்தில் அதிகரிக்க துவங்கிய போது ஊரடங்கு அமல் படுத்தப்பட்டது. ஊரடங்கு அமல் படுத்தப்பட்ட போது இதனை மீறுவோர் மீது காவலர்களால் வழக்கு தொடரப்பட்டது.
இந்நிலையில், கொரோனா கால விதிமுறைகளை மீறியதாக தொடரப்பட்ட வழக்குகள் அனைத்தும் ரத்து செய்யப்படுவதாக தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அறிவித்துள்ளார். அதாவது, தமிழகம் முழுவதும் 10 லட்சத்துக்கும் அதிகமான வழக்குகள் ரத்து செய்யப்படுவதாக முதல்வர் பழனிசாமி அறிவிப்பு.