வெள்ளி, 27 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Sugapriya Prakash
Last Modified: வியாழன், 4 பிப்ரவரி 2021 (12:37 IST)

சசிகலா வருகை: பட்டித்தொட்டியை கலக்கும் வரவேற்பு!!

மொத்தம் 15 இடங்களில் சசிகலாவுக்கு அமமுக சார்பில் பிரம்மாண்டமான வரவேற்பு அளிக்கப்படுகிறது. 

 
சசிகலாவை வரவேற்க தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் அமமுக தொண்டர்கள் கார் மற்றும் வேன்களில் அத்திப்பள்ளி பகுதிக்கு வருகிறார்கள். கிருஷ்ணகிரி மாவட்டத்தில் மட்டும் 6 இடங்களில் வரவேற்பு கொடுக்க ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது. 
 
அதோடு, தமிழகத்தில் ஓசூர், கிருஷ்ணகிரி, திருப்பத்தூர், வேலூர், ராணிப்பேட்டை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, சென்னை மாவட்டங்களில் மொத்தம் 15 இடங்களில் சசிகலாவுக்கு அமமுக சார்பில் பிரம்மாண்டமான வரவேற்பு அளிக்கப்படுகிறது. அந்தந்த மாவட்ட அமமுகவினர் இந்த ஏற்பாடுகளை செய்து வருகிறார்கள்.