திங்கள், 27 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Papiksha Joseph
Last Modified: திங்கள், 21 டிசம்பர் 2020 (13:16 IST)

ரூ.2,500 உடன் கூடிய பொங்கல் பரிசு: இன்று தொடக்கி வைக்கிறார் முதல்வர்!

இன்று முதல் பொங்கல் பரிசு திட்டத்தை துவங்கி வைக்கிறார் முதல்வர் 
 
ஆண்டுதோறும் பொங்கலை முன்னிட்டு தமிழக அரசு மக்களுக்கு பொங்கல் செய்ய தேவையான பொருட்கள் கொண்ட பையும், ரொக்க தொகையும் வழங்கி வருகிறது. அதே போல் 2021 ஆண்டும்  பரிசாக அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு வீடு வீடாக டோக்கன் வழங்கி தலா ரூ.2,500 வழங்கப்படும் அறிவவித்தனர். 
 
இதனோடு, ஒரு கிலோ அரிசி, ஒரு முழு கரும்பு, ஒரு கிலோ சர்க்கரை, திராட்சை, முந்திரியும் வழங்கப்படுமாம். இந்நிலையில் தலைமைச் செயலகத்தில் இன்று  மாலை 5 மணிக்கு இந்த திட்டத்தை தொடக்கி வைக்கிறார் முதல்வர் பழனிச்சாமி இதற்காக தமிழக அரசு ரூ.2.10 கோடி அரிசி மற்றும் அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசுத்தொகுப்பு வழங்கிட மொத்தம் ரூ.5,604.84 கோடி நிதி ஒதுக்கீடு செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.