திங்கள், 11 நவம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Sugapriya Prakash
Last Modified: சனி, 19 டிசம்பர் 2020 (15:42 IST)

இதுவும் தேர்தல் யுக்தியோ? பொங்கல் காசை ஏகத்துக்கும் கூட்டிய ஈபிஎஸ்!!

அரிசி குடும்ப அட்டைக்கு பொங்கல் பரிசாக ரூ.2500 வழங்கப்படும் என  முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார். 
 
இன்று முதல் தனது சொந்த தொகுதியில் இருந்து தேர்தல் பிரச்சாரத்தை துவங்கிய எடப்பாடி பழனிச்சாமி, 2021 பொங்கல் பரிசாக அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு வீடு வீடாக டோக்கன் வழங்கி தலா ரூ.2,500 வழங்கப்படும் என அறிவித்துள்ளார். 
 
இதனோடு, ஒரு கிலோ அரிசி, ஒரு முழு கரும்பு, ஒரு கிலோ சர்க்கரை, திராட்சை, முந்திரியும் வழங்கப்படுமாம். ஜனவரி 4 ஆம் தேதி முதல் நியாய விலைக் கடைகளில் பொங்கல் பரிசு தொகுப்பு விநியோகிக்கப்படும் என்றும் தெரிவித்துள்ளார்.
 
இத்தனை ஆண்டுகளாக ரூ.1,000 தொகை மட்டுமே பொங்கலுக்கு வழங்கப்பட்டு வந்த நிலையில் இந்த ஆண்டு கொரோனா காரணமாக ரூ.2,500 வழங்கப்படுகிறதா? அல்லது தேர்தல் காரணமாக அதிகரித்து வழங்கப்பட உள்ளதாக என சந்தேகங்கள் எழுந்துள்ளது.