பிரதமருக்கு தமிழக முதல்வர் அவசர கடிதம்: என்ன காரணம்?

edappadi modi
பிரதமருக்கு தமிழக முதல்வர் அவசர கடிதம்: என்ன காரணம்?
siva| Last Updated: வெள்ளி, 18 டிசம்பர் 2020 (10:50 IST)
தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் பிரதமர் நரேந்திர மோடிக்கு அவசர கடிதம் ஒன்றை எழுதியுள்ளார். அந்த கடிதத்தில் இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்ட 36 தமிழக மீனவர்கள் மற்றும் 5 படகுகளை மீட்க வெளியுறவுத்துறை மூலம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி உள்ளார்

கடந்த சில ஆண்டுகளாக தமிழக மீனவர்களுக்கு இலங்கை கடற்படையினரால் தொந்தரவுகள் இல்லாமல் இருந்த நிலையில் கடந்த சில நாட்களாக மீண்டும் அந்த தொந்தரவுகள் ஆரம்பித்துவிட்டது. இதனை அடுத்து சமீபத்தில் 36 தமிழக மீனவர்களை கைது செய்த இலங்கை கடற்படையினர் அவர்கள் வந்த 5 படகுகளையும் பறிமுதல் செய்தனர்

இதனை அடுத்து மீனவர்களின் கோரிக்கையை அடுத்து தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்ட 36 தமிழக மீனவர்கள் மற்றும் 5 படகுகளை மீட்க பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதி உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது
பிரதமருக்கு தமிழக முதல்வர் அவசர கடிதம்: என்ன காரணம்?
பிரதமருக்கு தமிழக முதல்வர் அவசர கடிதம்: என்ன காரணம்?இதில் மேலும் படிக்கவும் :