செவ்வாய், 26 நவம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By sinoj
Last Modified: புதன், 30 ஜூன் 2021 (22:56 IST)

பழம்பெரும் நடிகரின் பேரனுக்கு முதல்வர் ஸ்டாலின் நிதியுதவி

பழம்பெரும் நடிகர்  எம்.கே.தியாகராஜ பாகவதர் பேரனுக்கு முதல்வர் ஸ்டாலின்  ரூ.5 லட்சம் நிதியுதவி வழங்க உத்தரவிட்டுள்ளார்.

தமிழ் சினிமாவில் முதல் சூப்பர் ஸ்டார், ஏழிசை மன்னர், காந்தக் கந்தர்வன் உள்ளிட்ட பல பெயர்களுக்குச் சொந்தக்காரர் எம்.கே.தியாகராஜ பாகவதர்.

இவர் நடிப்பில் வெளியான ஹரிதாஸ் உள்ளிட்ட படங்கள் ஒரு வருடம் ஓடியதாக வரலாறு உண்டு.

இவரது பாடல்கள் இன்றும் காலத்தால் அழியாத நிலையை அடைந்து அனைவராலும் ரசித்துப் பாராட்டப்படுகிறது.

இந்நிலையில் பழம்பெரும் நடிகர் எம்.கே.தியாகராஜ பாகவதர் பேரன் கஷ்டத்டில் உழல்வதாக தகவல் வெளியானதை அடுத்து,. தமிழக முதல்வர்  அவருக்கு ரூ.5 லட்சம் நிதி உதவி அளித்தும் வீட்டு வசதி வாரிய குடியிருப்பில் குறைந்த வாடகையில் வீடு ஒதுக்கி உத்தரவிட்டுள்ளார்.

முதல்வர் ஸ்டாலின் செயலுக்கு இயக்குநர் சீனு ராமசாமி பாராட்டியுள்ளார்.

இதுகுறித்து அவர் தனது டுவிட்டர் பக்கத்தில், 'ஏழிசை மன்னர்' எம்.கே.தியாகராஜ பாகவதரின் சந்ததியினருக்கு வாழ வீடும் நிதி உதவியும் வழங்கிய  நமது முதல்வர் திரு @mkstalin அவர்களின்  கருணை நிறை உள்ளத்தை ஒரு சினிமா கலைஞனாக வாழ்த்துகிறேன். வணங்குகிறேன்  எனத் தெரிவித்துள்ளார்.