திங்கள், 27 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Sinoj
Last Modified: புதன், 19 மே 2021 (17:13 IST)

விஜயகாந்த் குணமடைய முதல்வர் ஸ்டாலின் வாழ்த்து !

நடிகர் விஜயகாந்த் விரையில் உடல்நலம்பெற வேண்டுமென முதல்வர் ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

தேமுதிக தலைவர் விஜயகாந்த் அவர்கள் இன்று மூச்சுத்திணறல் காரணமாக சென்னை தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் அவரது உடல் நிலை சீராக இருப்பதாகவும் அவரது உடல் நிலை குறித்த வதந்தி எதையும் நம்ப வேண்டாம் என்றும் தேமுதிக தலைமை அறிக்கை ஒன்றை வெளியிட்டது.

இந்த நிலையில் தற்போது மருத்துவமனை வட்டாரங்களில் இருந்து வெளி வந்திருக்கும் தகவலின்படி விஜயகாந்த் அவர்களுக்கு கொரோனா பாதிப்பு இல்லை என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. விஜயகாந்த் அவர்களுக்கு கொரோனா பரிசோதனை எடுத்ததாகவும் அந்த பரிசோதனையில் அவருக்கு நெகட்டிவ் ரிசல்ட் வந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் அவரது உடல் நிலை சீராக இருப்பதால் நாளை அல்லது நாளை மறுநாள் அவர் டிஸ்சார்ஜ் செய்யப்படுவார் என்றும் மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. இதனால் தேமுதிக தொண்டர்கள் மற்றும் விஜயகாந்த் ரசிகர்கள் நிம்மதி அடைந்துள்ளனர்.

இந்நிலையில் நடிகர் விஜயகாந்த் விரைவில் குணமடைய வேண்டுமென முதல்வர் ஸ்டார்லின் தனது டுவிட்டர் பக்கத்தில் வாழ்த்தியுள்ளார்.

இதுகுறித்து அவர் பதிவிட்டுள்ளதாவது:

மருத்துவ பரிசோதனைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள தேமுதிக தலைவர் அன்பு நண்பர் @iVijayakant அவர்கள் விரைவில் முழு உடல்நலன் பெற்று தனது அரசியல் பணிகளை மேற்கொள்ள விழைகிறேன் எனத் தெரிவித்துள்ளார்.