1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By siva

இ.எம்.ஐ விவகாரம்: ரிசர்வ் வங்கி கவர்னருக்கு கடிதம் எழுதிய முதல்வர் ஸ்டாலின்!

கொரோனா வைரஸ் காலத்தில் இஎம்ஐ கட்ட முடியாமல் தவித்து வரும் மக்களுக்கு சலுகைகள் வழங்க வேண்டும் என முதல்வர் முக ஸ்டாலின் அவர்கள் ரிசர்வ் வங்கி கவர்னருக்கு கடிதம் ஒன்றை எழுதியுள்ளார். இந்த கடிதத்தில் அவர் கூறியிருப்பதாவது: 
 
கொரோனா வைரஸ் ஊரடங்கு காலத்தில் வங்கிகளில் கடன் வாங்கிய பொதுமக்கள் இஎம்ஐ செலுத்த முடியாமல் கஷ்டப்பட்டுக் கொண்டிருக்கிறார்கள். எனவே அவர்களுக்கு உதவிடும் வகையில் இஎம்ஐ செலுத்த கால அவகாசம் அளிக்க வேண்டும் 
 
சிறு மற்றும் குறு தொழில் நிறுவனங்களின் கடன் சுமையை குறைக்கும் வகையில் குறைந்தபட்சம் ஆறு மாதங்களுக்கு இஎம்ஐ செலுத்த அவகாசம் அளிக்க வேண்டும். மேலும் அந்த ஆறு மாதங்களுக்கு வட்டி வசூலிக்க கூடாது 
 
இந்த நடவடிக்கைகளை பிரதமர் மோடி மற்றும் ரிசர்வ் வங்கி ஆளுநர் உடனே எடுக்க வேண்டுமென முதல்வர் ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார் முதல்வரின் கடிதமும்