1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Sinoj
Last Updated : திங்கள், 12 செப்டம்பர் 2022 (20:20 IST)

அரசு ஊழியர்களை முதல்வர் ஸ்டாலின் ஏமாற்றிவிட்டார்- எடப்பாடி பழனிசாமி

முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமி, முதல்வர் ஸ்டாலின் அரசு ஊழியர்களி பணி செய்யவிடாமல் தடுக்கிறார் எனத் தெரிவித்துள்ளார்.

தமிழகத்தின் முன்னாள் முதல்வரும் அதிமுக இடைக்கால பொதுச்செயலாளருமான எடப்பாடி பழனிசாமிக்கும், ஓ.பன்னீர்செlல்வத்திற்கும் இடையே உட்கட்சி மோதல் நீடித்து வரும் நிலையில் சமீபத்தில், அதிமுக தலைமை அலுவலக சாவி தொடர்பாக நீதிமன்றம் எடப்பாடி பழனிசாமி தரப்பு  நடவடிகைகள்  செல்லும் எனத் தீர்ப்பு வெளியானது.

இந்த நிலையில், இன்று  சேலத்தில் செய்தியாளர்களுக்குப் பேட்டியளித்த எடப்பாடி பழனிசாமி,  அதிமுக தலைமை அலுவலக சாவி தொடர்பாக    நீதிமன்றம் அளித்துள்ள தீர்ப்பு மகிழ்ச்சி அளிக்கிறது.

அதிமுக கட்சி விதிமுறைகளுக்கு உட்பட்டு விரைவில் பொதுச்செயலாளர் தேர்தல் நடத்தப்படும் என்றும், கொரோனா பாதிப்பில் இருந்து மக்கள் மீண்டுவரும் நிலையில், தமிழக அரசு மின்சாரக் கட்டணம்  உயர்த்தியுள்ளது.

மேலும், அரசு ஊழியர்களை ஸ்டாலின் ஏமாற்றிவிட்டார். அரசு ஊழியர்களை சுதந்திரமாகச் செயல்படவிடாமல் தடுக்கிறார் என குற்றம்சாட்டியுள்ளார்.