ஞாயிறு, 1 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Prasanth Karthick
Last Modified: சனி, 12 செப்டம்பர் 2020 (11:07 IST)

ஏன் இப்படி பண்றீங்க.. படிப்பு இல்லாட்டியும் பிழைக்கலாம்! – சேரன் ஆதங்கம்!

நீட் தேர்வு பயத்தால் மதுரையை சேர்ந்த மாணவி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து இயக்குனர் சேரன் ஆதங்கமாக பதிவிட்டுள்ளார்.

கொரோனா காரணமாக ஒத்திவைக்கப்பட்ட மருத்து படிப்புக்கான நீட் தேர்வு நாளை நாடு முழுவதும் நடைபெற உள்ளது. முன்னதாக நீட் மன உளைச்சலாம் மாணவர் விக்னேஷ் தற்கொலை செய்து கொண்ட அதிர்ச்சியே மறையாத நிலையில் மதுரை மாணவி ஜோதிஸ்ரீ துர்கா தற்கொலை செய்து கொண்டுள்ள சம்பவம் மேலும் அதிர்ச்சியை அளித்துள்ளது.

மதுரை மாணவியின் இறப்பு குறித்து பலரும் அஞ்சலில் செலுத்தி வரும் நிலையில் இயக்குனர் சேரன் இதுகுறித்து ட்விட்டரில் பதிவிட்டுள்ளார். அதில் அவர் ” படிப்பு மட்டுமே வாழ்க்கை இல்லைன்னு இந்த குழந்தைகளுக்கு எந்த பள்ளியில் சொல்லிக்கொடுப்பது.. இத்தனை வருடம் வளர்த்த பெற்றோர்களை ஏமாற்ற எப்படி மனம் வருகிறது. முதலில் மாணவர்களுக்கு தேவை படிப்பே இல்லையென்றாலும் பிழைக்கலாம் என்ற பயிற்சி. மக்களே குழந்தைகளை இழக்காமல் இருக்க சிந்தியுங்கள்.” என்று தெரிவித்துள்ளார்.