ஞாயிறு, 29 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Papiksha Joseph
Last Updated : சனி, 12 செப்டம்பர் 2020 (10:06 IST)

நீட் தற்கொலை: கடைசியாக மாணவி எழுதிய உருக்கமான கடிதம்

நீட் தேர்வு பயத்தால் தற்கொலை கொலை செய்துகொண்ட மதுரையைச் சேர்ந்த மாணவியின்  கடிதம் சிக்கியுள்ளது.

நீட் எனும் மருத்துவ நுழைவுத்தேர்வால் பல கிராமப்புற மற்றும் அரசு பள்ளி மாணவர்களின் மருத்துவம் படிக்கும் கனவும் பலியாகி வருகிறது. இதற்கு எதிராக எதிர்க்கட்சிகள் குரல் கொடுத்து போராட்டங்களை நடத்தினாலும், மத்திய அரசு உறுதியாக இருந்து வருகிறது. இதனால் தமிழகத்தில் பல மாணவர்களின் உயிர் பலியாகியுள்ளது.

சமீபத்தில் அரியலூர் மாவட்டம் எலந்தகுழி கிராமத்தைச் சேர்ந்த மாணவர் விக்னேஷ் தற்கொலை செய்து கொண்டது பரபரப்பை ஏற்படுத்தியது. இந்நிலையில் நாளை நீட் தேர்வு நடக்க உள்ள நிலையில் மதுரையைச் சேர்ந்த துர்கா என்ற மாணவி தற்கொலை செய்து கொண்டது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இவர் ஏற்கனவே நீட் தேர்வு எழுதி தோல்வி அடைந்துள்ளார். அதனால் இந்த ஆண்டு மிகுந்த பயத்துடனே படித்து வந்ததாக சொல்லப்படுகிறது. இந்நிலையில் நேற்று படித்துக் கொண்டிருந்த போது தனது அறையிலேயே தூக்கு மாட்டித் தற்கொலை செய்துகொண்டுள்ளார்.

அந்த மாணவி தற்கொலை செய்து கொள்வதற்கு முன் உருக்கமாக கடிதம் எழுதியுள்ளார். அதில்  " என்னை மன்னிக்க வேண்டும், என்னால் முடியவில்லை. தம்பி நன்றாக படிக்க வேண்டும், எதிர் காலத்தை சிறந்ததாக அமைத்து கொள்.  அத்துடன் தம்பி... நீ அம்மா அப்பாவை பார்த்து கொள். சித்தி, மாமா, அத்தை, தாத்தாவுக்கு பாய்...பாய்... அப்பா உங்களுக்கு இருதய நோய் உள்ளதால் என்னை பற்றி நினைத்து கவலை கொள்ள வேண்டாம். எனக்கு சிறந்த தந்தையாக நீங்கள் இருந்தீர்கள் அனைவரும் மகிழ்ச்சியாக இருக்கும்படி பார்த்து கொள்ளுங்கள். என்று கடிதம் எழுதிவிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளது அனைவருக்கும் மிகுந்த வருத்தத்தை கொடுக்கிறது.