1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Mahendran
Last Modified: திங்கள், 2 ஜனவரி 2023 (14:33 IST)

2022ம் ஆண்டில் சென்னை மெட்ரோ ரயிலில் பயணம் செய்தது எத்தனை கோடி பேர்? முழு விபரங்கள்!

metro
கடந்த 2022ஆம் ஆண்டில் சென்னை மெட்ரோ ரயிலில் 6.09 கோடி பயணம் செய்திருப்பதாக மெட்ரோ ரயில் அறிக்கை வெளியிட்டுள்ளது. இது 2021 ஆம் ஆண்டு பயணம் செய்த பயணிகளின் எண்ணிக்கையை விட 3.56 கோடி அதிகம் என்றும் சென்னை மெட்ரோ ரயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது. 
 
சென்னை மெட்ரோ ரயில் சேவை தொடங்கிய நாளில் இருந்து ஆண்டுக்காண்டு மெட்ரோ ரயிலில் பயணம் செய்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. 2019ஆம் ஆண்டு 3.25 கோடி பயணம் செய்த நிலையில் 2020 ஆம் ஆண்டு கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக சில மாதங்கள் மெட்ரோ ரயில்கள் நிறுத்தப்பட்டுள்ளதால் 1.10 கோடி பேர் பயணம் செய்தனர்
 
இந்தநிலையில் 2021 ஆம் ஆண்டு ஜூன் மாதம் வரை மெட்ரோ ரயில்கள் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது. இதனால் அவ்வாண்டில் 2.53 கோடி பேர் மட்டும் பயணம் செய்தனர் 
இந்நிலையில் 2022ஆம் ஆண்டு 6.09 கோடி பேர் பயணம் செய்ததாக சென்னை மெட்ரோ ரயில் நிலையம் தெரிவித்துள்ளது. இனி வரும் ஆண்டுகளில் இதைவிட அதிகமாக பயணம் செய்வார்கள் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
 
Edited by Mahendran