ஞாயிறு, 1 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Siva
Last Updated : வெள்ளி, 11 ஆகஸ்ட் 2023 (14:02 IST)

தொடர் விடுமுறையை முன்னிட்டு கூடுதல் மெட்ரோ ரயில் சேவை..! சென்னை மெட்ரோ அறிவிப்பு..!

தொடர் விடுமுறையை முன்னிட்டு கூடுதலாக மெட்ரோ ரயில் சேவை இயக்கப்படும் என சென்னை மெட்ரோ ரயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.  
 
நாளை மற்றும் நாளை மறுநாள் சனி ஞாயிறு மற்றும் செவ்வாய்க்கிழமை சுதந்திர தினம் தொடர் விடுமுறை வருகிறது. திங்கட்கிழமை ஒருநாள் விடுமுறை எடுத்தால் நான்கு நாட்கள் தொடர் விடுமுறை என்பதால் சொந்த ஊர் செல்லும் மக்களின் எண்ணிக்கை அதிகம் ஆகி உள்ளது. 
 
இந்த நிலையில் சென்னை கோயம்பேடு, எழும்பூர், சென்ட்ரல் ஆகிய பகுதிகளுக்கு செல்வதற்காக  மெட்ரோ ரயில் சேவை  கூடுதலாக இயக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. 
 
இன்று இரவு மற்றும் இரவு 10 மணி வரை 6 நிமிட இடைவெளியில் மெட்ரோ ரயில்கள் இயக்கப்படும் என்றும் நெரிசலை குறைக்கும் வகையில் கூடுதலாக ரயில் சேவை ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என்றும் சென்னை மெட்ரோ ரயில் நிர்வாகம் அறிவித்துள்ளது.
 
Edited by Siva