வியாழன், 23 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Sinoj
Last Updated : வெள்ளி, 11 ஆகஸ்ட் 2023 (13:36 IST)

போதைப் பொருட்கள் இல்லாத தமிழ்நாடு" உறுதிமொழி முதலமைச்சர் தலைமையில் ஏற்பு

cm stalin
சென்னை, கலைவாணர் அரங்கத்தில் காவல்துறை சார்பில் நடைபெற்ற “போதைப் பொருட்கள் இல்லாத தமிழ்நாடு” நிகழ்வில், நாட்டு நலப் பணி திட்ட மாணவர்கள், தேசிய மாணவர் படை, பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்கள், போதைப் பொருட்கள் ஒழிப்பு உறுதிமொழியை முதல்வர் மு.க.ஸ்டாலின்  தலைமையில் ஏற்றுக்கொண்டனர்.

இந்த விழாவில் முதல்வர் மு.க.ஸ்டாலின் கூறியதாவது:

போதைப் பொருட்கள் இல்லாத தமிழ்நாடு - என்ற அக்கறை மிகுந்த நோக்கத்தோடு கடந்த ஆண்டு இந்தத் திட்டம் தமிழ்நாடு அரசால் தொடங்கப்பட்டது.

போதைப் பொருள்கள் புழக்கத்தை தடுக்க வேண்டும். போதைப்பொருள்விற்பனை மற்றும் கடத்தலில் ஈடுபடுகிறவர்கள் மேல் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

 போதைப்பொருள் புழக்கத்தால் ஏற்படுகின்ற தீமைகளை பற்றி இளம் தலைமுறையினர் இடையே விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். இதுதான் இந்தத் திட்டத்தினுடைய நோக்கங்கள்.அதன் காரணமாக, தமிழ்நாட்டில் இத்தகைய குற்றச்சம்பவங்கள் வெகுவாக குறைந்து கொண்டு வருகிறது. அதற்காக, முழுவதுமாக தடுத்துவிட்டோம் என்று சொல்ல வரவில்லை. குறைந்து கொண்டு வருகிறது என்று தான் நான் சொல்கிறேன். இந்தளவுக்கு குறைய, அக்கறையுடனும், பொறுப்புடனும் செயல்பட்டு வருகின்ற காவல்துறை அதிகாரிகள் எல்லோருக்கும் என்னுடைய நன்றியை முதலில் நான் தெரிவித்துக் கொள்ள விரும்புகிறேன். இந்த ஆர்வமும், அக்கறையும் குறையாமல் செயல்பட்டு. முற்றிலுமாக போதைப் பொருட்கள் நடமாட்டத்தை தடுக்கவேண்டும் என்று நான் கேட்டுக்கொள்கிறேன்.
இந்தத் திட்டத்தை கடந்த ஆண்டு தொடங்கியபோது, இது சமுதாய நலனுக்கான ஒரு சிறந்த திட்டம் என்று மருத்துவர்களும், பொதுமக்களும் வரவேற்றார்கள். போதைப் பழக்கத்தால், சீரழிந்து இருக்கின்ற மாணவர்களையும், இளைஞர்களையும் மீட்டெடுக்க வேண்டிய பெரும்பணி தமிழ்நாடு அரசுக்கு இருக்கிறது என்று சொன்னார்கள். அவர்கள் நம்பிக்கைக்கேற்ப இந்த விஷயத்தில், தமிழ்நாடு அரசு தொடர்ந்து செயல்பட்டு வந்து கொண்டிருக்கிறது. போதைப் பழக்கம் என்பது, அதை பயன்படுத்துகிறவர்கள் மட்டுமில்லாமல், அவர்கள் குடும்பத்தினருக்கும், சமூகத்துக்கும் கடுமையான பாதிப்புகளை ஏற்படுத்துகின்ற ஒரு கொடிய நோய். ஆறு காவல்துறை அதிகாரிகள்  வழங்கப்பட்டிருக்கிறது.

காவலர்களுக்கு இந்த பதக்கம் அரசினுடைய போதை ஒழிப்பு செயல்பாடுகளைப் பரவலாக எடுத்துக் கொண்டு செல்வதற்காக, இன்று எல்லா கல்வி நிறுவனங்களிலும், மாபெரும் போதைப் பொருள் எதிர்ப்பு உறுதிமொழிக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருக்கிறது. அரசுஅலுவலர்கள், கல்வி நிறுவனங்கள், மாணவர்கள் என்று நம் எல்லாரும் போதைப்பொருள் இல்லாத தமிழ்நாட்டிற்காக அர்ப்பணிப்புடன் செயல்பட வேண்டும். பள்ளி மாணவர்கள் நிறைய பேர் இங்கு வந்திருக்கிறீர்கள். உங்களுக்கு பள்ளியில் Health is Wealth என்று சொல்லிக் கொடுத்திருப்பார்கள். இதை நீங்கள் எப்போதும் ஞாபகத்தில் வைத்துக் கொண்டிருக்க வேண்டும். ஆசிரியர்களும் இதை எப்போதும் ஞாபகப்படுத்திக் கொண்டிருக்கவேண்டும். நீங்கள் என்ன தான் பணம் சம்பாதித்தாலும் நல்ல உடல்நிலை இருந்தால்தான் உங்களால் தொடர்ந்து உழைக்கவும் முடியும். சம்பாதித்த பணத்தை வைத்து சந்தோஷமாக இருக்கவும் முடியும். இதுதான் மாணவர்களுக்கு ஆசிரியர்கள் அறிவுரையாக வழங்கவேண்டும் என்று நான் இந்த தருணத்தில் நான் கேட்டுக் கொள்கிறேன்.

போதை ஒழிப்பைப் பொறுத்தவரை. தடுப்பு நடவடிக்கைகளும், விழிப்புணர்வு பிரச்சாரமும் ஒரு சேர நடக்க வேண்டும். காவல் துறையும், பொதுமக்களும் ஒரே நோக்கத்துடன் செயல்பட வேண்டும். இந்த நான்கும் நேர்கோட்டில் இணைந்தால் போதை இல்லாத தமிழ்நாட்டை நிச்சயம் உருவாக்கலாம்! உருவாக்குவோம்’என்று தெரிவித்துள்ளார்.