வெள்ளி, 29 நவம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By siva

நாளை உருவாகிறது காற்றழுத்த தாழ்வுப் பகுதி: சென்னை வானிலை ஆய்வு மையம்

meteorological
நாளை வங்க கடலில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி தோன்ற இருப்பதாகவும் இதனால் தமிழகத்தின் பல பகுதிகளில் மழைக்கு வாய்ப்பு என்றும் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
 
 சென்னை உள்பட தமிழகம் முழுவதும் கடந்த சில நாட்களாக கோடை வெப்பம் கொளுத்தி வரும் நிலையில் திடீரென வங்க கடலில் காற்றழுத்த தாழ்வு தோன்றியிருப்பது பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது
 
வங்கக்கடலில் காற்றழுத்த தாழ்வு நிலை உருவாகிறது என்றும் இதனால் சென்னை உள்பட தமிழகத்தின் பல பகுதிகளில் லேசான மழை முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்பிருப்பதாகவும் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது
 
இந்த காற்றழுத்த தாழ்வு, காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறுமா? என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.